மஹாராஷ்ட்ரா மற்றும் கர்நாடக மாநிலங்களில் குழந்தைகளை 30 அடி உயரத்தில் இருந்து கீழே தூக்கி போட்டு செய்யப்படும் வினோத நேர்த்திக்கடன் நடக்கின்றது. இவ்வாறு செய்வதினால் கடவுள் குழந்தைகளுக்கு நல்ல ஆரோக்கியத்தை கொடுப்பதாக அம்மக்கள் நம்புகின்றனர்.
குழந்தைகளை அங்குள்ள பூசாரிகள் தூக்கிப்போட கீழே நிற்பவர்கள் போர்வை கொண்டு அவர்களை பிடிக்கின்றார்கள். இந்து, முஸ்லீம் பாகுபாடின்றி இந்த நேர்த்திக்கடன் செய்யப்படுகின்றது. இதுகுறித்து, National Commission for Protection of Child Rights விசாரணை செய்து இந்த நேர்த்திக்கடனுக்கு தடை விதித்துள்ளது. இருந்தும், சில கிராமப்புறங்களில் இன்னும் நடந்து வருவதாக சொல்கின்றனர்.