ஆண்டவன் படைச்சதுலயே அற்புதமான, அம்சமான, அழகான ஒரு படைப்புனா அது பெண்கள் தான். அதே நேரத்துல ரொம்ப டேஞ்சரஸ் கிரியேச்சரும் அவங்க தான். இன்னைக்கு உலகத்துல, பொண்ணுங்க தான் எல்லா விஷயத்துலயும் நம்பர்.1 இடத்துல இருக்காங்க. அதே மாதிரி அதிகமா பேசுறதுலயும் அவங்க தான் டாப். ஒரு நாளைக்கு 20,000 வார்த்தைகள் பேசுறாங்களாம். ஆனால், ஆண்கள் 13,000 வார்த்தைகள் மட்டுமே பேசுறதா ஆக்ஸ்ஃபோர்ட் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
பொண்ணுங்க ஏன் இப்படி "தொணத் தொண" ன்னு பேசிக்கிட்டே இருக்காங்கன்னு ஆராய்ச்சி செஞ்சப்போ, அவங்க மூளையில சுரக்குற Foxp2 எனும் புரோட்டின் அளவு அதிகமா இருக்கிறது தெரிய வந்துருக்கு. இது ஆண்களுக்கு கம்மியா தான் சுரக்குதாம். இதனாலயே, ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் விரைவாக பேசத் தொடங்குவதோடு மட்டுமில்லமால், வார்த்தைக் கோர்வைகளை எளிதில் கற்றுக்கொள்கிறார்கள் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
WHY BLOOD..? SAME BLOOD..!!