கண்டுபிடிச்சத எல்லாம்... திண்ணு முடிச்ச டார்வின்...!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சார்லஸ் டார்வின் - இவர் தான் "மனுஷங்க குரங்குல இருந்து வந்தாங்க" னு சொன்ன அறிவியல் அறிஞர். உலகம் முழுவதும் கடல் வழியாவே பயணம் செய்து, எங்கெங்க..என்னென்ன உயிர்கள் இருக்கு, அதுங்க பெயர் என்னனு லிஸ்ட்டு போட்டவரும் இவர் தான். இன்னைக்கு நம்மள போட்டு டார்ச்சர் பண்ற "பயாலஜி" டீச்சர்களுக்கு வேலை போட்டு கொடுத்த முதலாளியும் இவரே. இங்கிலாந்தைச் சேர்ந்த டார்வினோட மூக்கு "பீகிள்" பறவைக்கு மாதிரி ஷார்ப்பா இருக்குமாம், அதனால இவர் போன பயணத்துக்கு "பீகிள் பயணம்" னு பேரு வச்சுட்டாங்க.. (மூக்கு பொடப்பா இருந்தாலே இப்படிலாம் யோசிக்கத் தோணுமோ..?) திரு. டார்வின் அவர்கள், அவர் புதுசா கண்டுபுடிக்கிற பறவைகள், விலங்குகளை எல்லாம் சாப்பிடுவாராம். ஆந்தை, ஈமு கோழி, பச்சோந்தி, காட்டுப்பூனை, வெட்டுக்கிளி, ஆமைகள் னு இவரால மொத்தம் 48 உயிர்கள் சாப்பிடப் பட்டுள்ளதாம். இவர் சாப்பிட்டு முடிச்சது போக மிச்சம் இருக்கிறத, லண்டன்ல இருக்கிற Zoological Society க்கு பார்சல் அனுப்பிடுவாராம். அவங்க அத ஆராய்ச்சி பண்ணி புதுசா பேரு வச்சிருக்காங்க. இவர் பண்ண இந்த சேட்டைக்காகவே ஒரு பறவைக்கு Rhea darwinii னு இவரோட பெயரையே வச்சுட்டாங்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close