வாங்களேன்... ஒரு கப் காபி சாப்பிடலாம்..!

  jerome   | Last Modified : 21 Feb, 2017 12:04 pm
15-ஆம் நூற்றாண்டில் "பாபா புடான்" என்ற இந்திய இசுலாமியரால், ஏமனிலிருந்து ரகசியமாக எடுத்து வரப்பட்ட 9 காபி விதைகள் தான் இந்தியாவில் முதன்முதலில் பயிரிடப்பட்டது. கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் உள்ள மலைப்பகுதியில், கடல் மட்டத்திலிருந்து 6000 அடி உயரத்தில் விதைக்கப்பட்டது. அன்று தொடங்கி இன்று வரை காபியின் நறுமணத்திற்கும், சுவைக்கும் அடிமையானவர்கள் நம்மில் ஏராளம். காபி குடிப்பதனால் அதிக நன்மைகள் இருப்பதாக அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப் பட்டுள்ளது. 1. பெட்ரோலுக்கு அடுத்தபடியாக உலக சந்தையில் அதிக மதிப்புடன் இருப்பது காபி தான். 2. தினமும் காலையில் 9:30 லிருந்து 10:30 மணிக்குள் காபி சாப்பிட்டால், அன்றைய நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர். 3. உலகம் முழுவதும் ஒரு நாளுக்கு 250 கோடி கப் காபி குடிக்கப் படுகின்றது. 4. காபி குடிப்பதனால் நம் உடலில் இரத்த ஓட்டம் சீராகின்றதாம். மேலும் ஆண்களுக்கு ஏற்படும் புரோஸ்டேட் கேன்சர் பாதிப்பு ஏற்படுவதில்லை. 5. காபி எனும் வார்த்தைக்கு அரேபிய மொழியில் "The Wine Of Bean" என்று அர்த்தம். 6. காபியை நுகராமல் குடித்தால், அதன் உண்மையான சுவையை உணரமுடியதாம். மேலும், கசப்பாக இருக்குமாம். 7. 70 கிலோ எடையுள்ள ஒரு நபரைக் கொல்வதற்கு, ஒரே நாளில் 70 கப் காபி குடிக்க வைத்தால் போதுமாம். 8. கடந்த 150 ஆண்டுகளாக காபி விளைச்சலில் பிரேசில் தான் முதலிடத்தில் உள்ளது. 9. காபி குடிப்பவர்களில் 50% பேருக்கு தற்கொலை செய்து கொள்ளும் எண்ணம் வருவதில்லையாம். 10. இன்றைய துருக்கியில் 13 - ஆம் நூற்றாண்டில் இருந்த ஓட்டோமான் பேரரசில் காபி குடிப்பவர்களுக்கு மரண தண்டனை அளிக்கப்பட்டதாம். இதையெல்லாம், காபி குடிக்கிற டைம்ல உங்க ஃப்ரெண்ட்ஸ் கூட ஷேர் பண்ணிக்கோங்க..

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close