உங்களுக்கு STRESS இருக்கா.. இல்லையா..? நீங்களே கண்டுப்புடிங்க டிப்ஸ்..!!

Last Modified : 21 Feb, 2017 04:56 pm

நம்மில் பலர் அதிக வேலைப்பளுவின் காரணமாகவும், குடும்ப சூழ்நிலையின் காரணமாகவும், மன அழுத்தத்திற்கு ஆளாகிறோம். ஆனால் நமக்கே அது தெரிவதில்லை. மன அழுத்தத்தை எப்படி கண்டுப்பிடிப்பது என்பதனை பார்ப்போம். தூக்கமின்மை : மனஅழுத்தம் அதிகமாக இருப்பதற்கான முக்கிய அறிகுறி தூக்கமின்மை. பகலில் எந்த வேலையையும் செய்யப் பிடிக்காது. இரவில் தூக்கமும் வராது. சிலர் விடிய விடிய எதையாவது யோசித்து கொண்டே இருப்பீர்கள். ஆனால், விடிந்ததும் எதைப் பற்றி யோசித்தோம் என்பதுகூட உங்களுக்கு தெரியாது. பிடித்தவர்களிடம் மீதே காட்டும் கோபம் : காரணம் எதுவும் இன்றி பிடித்தவர்களிடமே அடிக்கடி கோபத்தைக் காட்டுவீர்கள். அப்படியென்றால் பல நாட்களாக வெளிப்படுத்த முடியாத அளவுக்குக் காயங்களையும் கோபத்தையையும் மனதிலேயே அடக்கி வைத்திருக்கிறீர்கள் என அர்த்தம். அதனால் தான் சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட அன்புக்குரியவர்களிடம் கோபத்தைக் காட்டுகிறீர்கள். விஷயங்களை மூடி மறைப்பது : 'எனக்கு எந்தக் கவலையும் இல்லை. என் மீது எந்தத் தவறும் இல்லை’ என்று உங்களுக்கு நீங்களே அடிக்கடி கூறிக்கொள்வீர்கள். நண்பர்கள் உறவினர்களுடன் இருக்கும்போதும், பொது இடத்திலும் வலுக்கட்டாயமாக சந்தோஷமாக இருப்பதைப்போல் உங்களைக் காட்டிக்கொள்வீர்கள். ஆனால், தனிமையில் எதையோ பறிகொடுத்ததுபோல வெறுமையில் இருப்பீர்கள். எதிலும் சந்தேகம் : நம்ம செய்தது சரியா? தப்பா? ஒரு வேலை இப்படி பண்ணி இருக்கலாமோ என்று சின்னச் சின்ன விஷயங்களுக்குக்கூட சந்தேகம் தலைத்தூக்கும். இதன் காரணமாக, செய்யும் வேலைகளில் கவனம் செலுத்த முடியாமல், எண்ணங்கள் வேறு எங்கோ திசை திரும்பும். வேணும்... ஆனா வேணா: கல்யாணம், சினிமா, நண்பர்கள் வீடு, பார்ட்டி என்று பல இடங்களுக்குப் போக வேண்டும் என்று அதிகமாக ஆர்வம் காட்டுவீர்கள். `வா... போகலாம்!’ என்று யாராவது அழைத்தால், `வேண்டாம் மூட் சரியில்லை’ என்று தவிர்த்துவிடுவீர்கள்; தனிமையை விரும்புவீர்கள். உடல் வலி : அதிக மனஅழுத்தம், பதற்றம் காரணமாக அடிக்கடி உடல் வலி ஏற்படுவதுபோலத் தோன்றும். திடீர் என்று எடை கூடுவதுபோலவும், எலும்புகளில் வலி ஏற்படுவதுபோலவும் தோன்றும். அதிக சாப்பாடு வேட்டை : மனதில் நிம்மதியில்லை என்றாலோ, உணர்வுகளைப் பகிர்வதற்கு யாரும் இல்லை என்று நினைத்தாலோ அதிக அளவில் உணவைச் சாப்பிடத் தோன்றும். இப்படிச் சாப்பிடும் உணவு ஆரோக்கியமானதுதானா என்றுகூட யோசிக்கத் தோன்றாது. சாப்பாடு வேண்டாம் : சில நேரங்களில் எதிர்மறையாகவும் நடக்கும். அதிக மனஅழுத்தத்தால் சாப்பிடப் பிடிக்காது. சாப்பிடாமல் இருப்பதால், வேலை செய்வதற்கான ஆற்றல் கிடைக்காது.சோகமாக ஒரே இடத்தில் அமர்ந்திருக்கும் நிலை காணப்படும். காரணமற்ற அழுகை : காரணமின்றி அழத் தோன்றும். ஜன்னல் வழியாக எதையாவது பார்த்துக்கொண்டு இருந்தாலும், கண்களில் இருந்து தன்னையறியாமல் கண்ணீர் வரும். காரணம் கேட்டால் சொல்லத் தெரியாது. எந்தக் காரணமும் இல்லாமலேயே சோகம் ஒட்டிக்கொள்ளூம். மூளையில் ஏற்படும் ரசாயன ஏற்றத்தாழ்வுதான் இதற்கு முக்கியக் காரணம். மனஅழுத்தத்தை சரிசெய்யாமல் விட்டுவிட்டால் மற்ற நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதனால் மேலே குறிப்பிட்டுள்ள அறிகுறிகள் ஏதேனும் இருந்தால் நீங்கள் மனநல ஆலோசகரை கலந்தாலோசிப்பது நல்லது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close