ஜப்பானியர்கள் வழிபடும் "டாய்லெட் கடவுள்"

  jerome   | Last Modified : 21 Feb, 2017 03:48 pm

நாம் ஊர்ல வேப்பமரத்தையும், வழிகாட்டி கல்லையும் சாமியா கும்புடுற மாதிரி, ஜப்பான்ல கழிவறையை கடவுளாக கும்பிடுகின்றனராம். இது பல நூற்றாண்டுகளாக தொடர்ந்து நடைபெற்று வருகின்றதாம். கழிவறையில் உள்ள கழிவுகளை உரமாக பயன்படுத்தி விவசாயம் செய்வதாலும், கழிவறையை சுத்தமாக வைத்திருப்பதால் கிடைக்கும் ஆரோக்கியத்திற்காகவும் டாய்லெட் கடவுளுக்கு நன்றி செலுத்தவும் செய்கின்றனர். ஜப்பானின் பல பகுதிகளில், பல பெயர்களில் வணங்கப்படும் இந்த டாய்லெட் கடவுள் மிக அழகாக இருக்குமென்று ஜப்பானியர்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். ஜப்பான் மட்டுமின்றி கொரியா, சீனா, நியூஸிலாந்து போன்ற நாடுகளிலும் டாய்லெட் கடவுள்கள் இருக்கின்றனர். டாய்லெட் கடவுள் முன், சாமி ஆடும் பெண்கள் இருக்க, அவர்களிடம் கர்ப்பிணி பெண்கள் குறி கேட்கவும் செய்கின்றனராம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close