நம் உடலைப் பற்றிய சில ரகசியங்கள்....

  jerome   | Last Modified : 22 Feb, 2017 02:54 pm
இன்றைய அறிவியலில் நாம் அடைந்திருக்கும் வளர்ச்சிகளை கணக்கிட்டு கூறிவிட முடியாது. அதைவிட அதிகமாக, பல ரகசியங்களை தன்னுள் கொண்டிருக்கும் மனித உடலின் இயக்கங்களையும் எளிதில் கணக்கிட முடியவில்லை. கண்ணுக்குத் தெரியாத காற்றைக் குடித்து தான், நாம் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். நாம் இயற்கையின் படைப்பா..? இல்லை, இறைவனின் படைப்பா..? இப்படி விடை கிடைக்காத பல சூட்சுமங்களுக்கு மத்தியில், நம் உடல் பற்றிய சில ஆச்சர்யமூட்டும் தகவல்களையும் தெரிந்துகொள்வோம்... 1. நம் அனைவருக்கும் தனித்தனியான விரல் ரேகைகள் இருப்பது போலவே, நாவில் உள்ள கோடுகளும் தனித்தனியாகவே இருக்கின்றதாம். வேறு ஒருவருடன் ஒன்றிப் போவதே இல்லையாம். 2. குழந்தையாக இருக்கும்போது நம் உடலில் 350 எலும்புகள் இருக்குமாம். நாளைடைவில் அவை வளர்ந்து, ஒன்றோடொன்று இணைவதால் 206 எலும்புகளாக மாறுகின்றதாம். 3. நம் மூக்கினால் 50000 வகையான வாசனைகளை நுகர முடிகிறதாம். 4. நம் தோலில் ஒவ்வொரு சதுர இன்ச் பகுதியிலும் 3.2 கோடி பாக்டீரியாக்கள் உள்ளன. ஆனால், அவை எதுவும் தீங்கு விளைவிப்பதில்லை. 5. கால்களில் இரண்டு பாதங்களிலும் சேர்த்து 5 லட்சம் வியர்வை சுரப்பிகள் உள்ளன. 6. நம்முடைய தும்மலின் வேகம் மணிக்கு 100 மைல் வேகத்தில் உள்ளதாம். சிலபேருக்கு அதைவிட வேகமாகவும் இருக்கின்றது என அறிவியலாளர்கள் சொல்கின்றனர். 7. நம் உடலில் நாள் ஒன்றுக்கு 60 ஆயிரம் மைல் தூரம் அளவிற்கு இரத்த ஓட்டம் நடக்கின்றது. 8. சராசரியாக ஒருவருடைய எச்சில் சுரக்கும் அளவானது, இரண்டு நீச்சல் குளத்தின் நீர் அளவு இருக்குமாம். 9. கால் நகங்களை விட கை விரல் நகங்கள் தான் வேகமாக வளர்கின்றதாம். 10. நம் தலையில் மொத்தம் 1 லட்சம் மயிர்கால்கள் உள்ளது. இவை ஒவ்வொன்றும் 20 முடிகளை உருவாக்குமாம். இப்படி எண்ணிலடங்கா அற்புதங்களை உடைய நம் உடலை ஆரோக்கியமாக பேணி காப்பதே, இயற்கைக்கு நாம் செய்யும் கைம்மாறு.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close