ஹிட்லர் பெண்ணாக மாற்றப்பட்டாரா...?

  jerome   | Last Modified : 22 Feb, 2017 03:59 pm
இரண்டாம் உலகப்போருக்கு அடித்தளமிட்ட ஹிட்லரைப் பற்றிய விவாதங்கள் இன்றுவரை நடந்து கொண்டே தான் இருக்கின்றது. ஹிட்லர் ஒரு மன நோயாளி என்றும், அதனாலேயே யூதர்களை கொன்று குவித்தார் என்றும் சொல்லப்படுகின்றது. இப்பேர்ப்பட்ட சர்வாதிகாரி ஹிட்லரை, பெண்ணாக மாற்ற முயற்சித்துள்ளதாக புதிய சர்ச்சையும் எழுந்துள்ளது. இதுபற்றி ஆய்வு செய்த கார்டிஃப் பல்கலைக்கழக அறிவியல் பேராசிரியர் ஃபோர்ட், தன்னுடைய Secret Weapons: Technology, Science And The Race To Win World War II என்ற புத்தகத்தில் சில தகவல்களை குறிப்பிட்டு உள்ளார். அதன்படி, பெண்தன்மையை உண்டாக்கும் "ஈஸ்ட்ரோஜன்" என்ற ஹார்மோனை, ஹிட்லரின் அன்றாட உணவில் கலந்து கொடுக்கப்பட்டதாகவும், அதன் மூலம் அவருடைய கோபத்தையும், வீரியத்தையும் குறைக்க முயற்சி செய்ததாகவும் எழுதி உள்ளார். இந்த உணவை ஹிட்லரின் தங்கையும், அவரின் உதவியாளராகவும் இருந்த பவுலா ஹிட்லர் மூலமாக கொடுக்கப்பட்டது எனவும் ஃபோர்ட் கூறுகின்றார். போர்க்காலங்களில் இது போன்ற தந்திரங்கள் செய்து எதிரியை வீழ்த்துவது இயல்பான ஒன்று தான் என பிற வரலாற்று ஆசிரியர்களும் தெரிவித்து உள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close