வாழ்க்கையில ஜெயிக்க இந்த 5 விஷயத்தை செய்யாதீங்க ??

Last Modified : 23 Feb, 2017 06:57 pm
பொதுவா எல்லார்கிட்டயும் மனசுல தீயா எறிஞ்சிட்டு இருக்குற விஷயம் வாழ்க்கையில எப்படியாவது முன்னேறணும் இல்ல, ஜெயிக்கணும் இது தான். ஆனா ஒண்ணு கிடைக்கணும்னா, ஒண்ண இழந்து தான் ஆகணும்னு சொல்லுவாங்க. நீங்க அப்படி எதையும் இழக்க வேண்டாம் ஆனா நான் சொல்லுற இந்த 5 விஷயத்தை மட்டும் செய்யாதீங்க ப்ளீஸ்....... (1) ஆரோக்கியமற்ற வாழ்க்கை : வாழ்க்கையில எத செய்யணும்னாலும் உடம்பும் மனசும் நல்லா இருக்கணும். ஆரோக்கியம் இல்லனா எவ்ளோ பணம், பெயர் சம்பாதிச்சாலும் அந்த சந்தோஷத்த அனுபவிக்க முடியாம போயிடும். ஆமாங்க, ஆரோக்கியமான வாழ்க்கைக்கு 2 விஷயம் நீங்க செஞ்சே ஆகணும். # ஆரோக்கியமான உணவு # உடற்பயிற்சி (2) குறுகிய கால திட்டம் : இன்னைக்கு மக்களுக்கு எல்லாத்துலயும் அவசரம் தான், உடனே எல்லாமே நடந்து முடிஞ்சிடணும். 2 நிமிஷத்துல MAGGI , 3 செகண்ட்ல பாப்கார்ன் இப்படிப்பட்ட இன்ஸ்டன்ட் உலகத்துல சட்டு புட்டுனு தான் நம்ம திட்டங்களும் போடுவோம். ஆனால், சாதிச்ச மனிதர்கள் கிட்ட போய் கேளுங்க சொல்லுவாங்க எவ்வளோ படிகளை தாண்டி, அவங்களோட நீண்ட கால திட்டத்த நிறைவேத்தி இருக்காங்கனு. சாதிக்கணும்னா பெருசா யோசிங்க, அதற்கான முயற்சில இறங்குங்க .. முயற்சி திருவினையாக்கும். (3) பிறர் மேல் பழி போடாதீர்கள் : ஒரு சின்ன தப்புனா கூட அடுத்தவங்க மேல பழிய போட்டுட்டு தன்னை காப்பாத்திக்கணும்னு நினைக்கிறவங்க தான் அதிகம். பழி போட ஆள் இல்லனா அதிர்ஷடம் மேல பழிய போட்டுட்டு தப்பிச்சிடுவாங்க. தயவு செய்து அப்படி இருக்காதீங்க நீங்க தப்பு பண்ணா அத நேர்மையா ஒத்துக்கோங்க. நீங்க செய்ற விஷயங்களுக்கு நீங்களே பொறுப்பு ஏற்கும் போது உங்க வளர்ச்சி அபாரமா இருக்கும். (4) சமூக வலைத்தளம் ; பொறந்த குழந்தைல இருந்து பல்லு போற பாட்டி வரைக்கும் எல்லார் கைலயும் ஆண்ட்ராய்ட் போன் தான். 'facebook' , 'whatsapp' , TV, இதுலயே வாழ்க்கைல பாதி நாட்கள அழிச்சிடுறோம். அதற்கு பதிலா வாழ்க்கையின் தரத்தை உயர்த்த கூடிய விஷயங்கள கத்துக்கோங்க. (கல்லாதது கடலளவு இருக்கு) (5) உங்கள சுத்தி இருக்கும் விஷயங்களை மாற்றாதீர்கள்: உங்கள சுத்தி இருக்க விஷயங்களை உங்களுக்கு புடிச்ச மாதிரி மாத்தணும்னு ரொம்ப கஷ்டப்பட்டு முயற்சி பண்ணாதீங்க. இதனால உங்களுக்கு தான் வீணா மனவருத்தம் வரும். புடிக்காத விஷயங்கள இருந்து விலகி இருங்க. மாத்தணும்னு முயற்சி பண்ணீங்கன்னா அதுக்கு முடிவே இல்லாம போயிடும். வாழ்க்கையில் ஆயிரம் தடைக்கல்லப்பா; தடைக்கல்லும் உனக்கொரு படிக்கல்லப்பா.....

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close