அரை பாட்டில் பீருக்காக 9 வருடம் வேலை பார்த்த குரங்கு ...!!

  jerome   | Last Modified : 23 Feb, 2017 05:16 pm

தென் ஆப்பிரிக்கா, கேப் டவுன் நகர் ரயில் நிலையத்தில் 1880 - ஆம் ஆண்டு 'ஜாக்' என்ற பபூன் வகை குரங்கு கேட் கீப்பராக வேலை பார்த்து உள்ளது. வெறும் கேட் கீப்பராக மட்டும் இல்லாமல், 'சிக்னல் மேன்' ஆகவும் சிறப்பாக செயல்பட்டு உள்ளது. இந்த ரயில் நிலையத்தில் ஏற்கனவே வேலை பார்த்த ஜேம்ஸ் என்பவருக்கு ஒரு ரயில் விபத்தில் இரு கால்களும் இல்லாமல் போய்விட்ட நிலையில், 'ஜாக்' அவருக்கு உதவியாக இருந்துள்ளது. ஜாக், கிட்டத்தட்ட 9 வருடங்கள் ரயில் வே - யில் வேலை பார்த்துள்ளது. தன்னுடைய பணி காலத்தில் ஒரு ரயில் விபத்து கூட ஏற்படாமல் பார்த்துக் கொண்ட 'ஜாக்' 1890 - ல் காசநோயால் பாதிக்கப்பட்டு இறந்து விட்டதாம். ஜாக்கிற்கு தினமும் 20 சென்ட் பணமும், வாரம் ஒரு முறை அரை பாட்டில் பீரும் சம்பளமாக கொடுக்கப் பட்டதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close