மனதை மயக்கும் மண் வாசனையின் ரகசியம் என்ன...???

  jerome   | Last Modified : 25 Feb, 2017 03:11 pm
மழையை ரசிக்காத மனம் படைத்தவர்கள் யாருமே இருக்க முடியாது. அதிலும், மழைத்துளிகள் மண்ணில் வீழ்ந்து உருவாக்கும் மண் வாசனையை நுகர்ந்து அனுபவிப்பவர்கள் நம்மில் ஏராளம். இயற்கை, தன்னை ரீஃப்ரெஷ் பண்ணிக்கொள்ள அப்பப்போ அடித்துக்கொள்ளும் பெர்ஃப்யூம் தான் இந்த மண்வாசனை. இயற்கையாகவே உருவாகும் இந்த வாசனை மூன்று விதங்களில் உண்டாவதாக ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். 1. மண் வாசனையை Petrichor என்று அழைக்கின்றனர். இந்த Petrichor உருவாவதற்கு தாவரங்களும் ஒரு வகையில் உதவியாக இருக்கின்றதாம். வறண்ட காலங்களில் தாவரங்களில் சுரக்கும் ஒரு வகை எண்ணெய், மழை பெய்யும் முன் வரும் ஈரக்காற்றுடன் கலந்து வாசனையை ஏற்படுத்துகின்றதாம். 2. மண்ணில் உள்ள actinomycetes எனும் பாக்டீரியாக்கள், மழைத்துளியுடன் சேர்ந்து உண்டாகும் வேதி நிகழ்வினாலும் மண் வாசனை உண்டாகின்றதாம். 3. மழை உருவாகும் போது ஏற்படும் இடி மற்றும் மின்னலால் மேகத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் மூலக்கூறுகள் நைட்ரிக் ஆக்சைடாக மாற்றப்பட்டு Petrichor உருவாகின்றதாம். மழை பொழிவதற்கு முன்னே வரும் மழை வாசம் இதனால் தான் நிகழ்கின்றது. இனிமேல் மழை பெய்யும்போது Petrichor களை நுகர்ந்து என்ஜாய் பண்ணுங்க...

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close