ஃபார்முலா 1 கார்களால் பறக்க முடியும், தெரியுமா??

  shriram   | Last Modified : 26 Feb, 2017 06:35 pm
உலகின் மிகப் பிரபலமான கார் ரேஸ் பந்தயமான ஃபார்முலா 1 போட்டியில் ஓடும் கார்கள், சுமார் 350 கிமீ வேகம் வரை செல்லும் சக்தி கொண்டவையாகும். வேகத்தை அதிகரிப்பதற்காக மிகவும் லேசான காம்போசிட் வகை தாதுக்களால் இந்த கார்கள் வடிவமைக்கப்படும். குறைந்த எடை கொண்டதாலும், அதிக வேகத்தில் செல்ல, விமானத்தை போன்ற உடல்வாகு கொண்டதாலும், இந்த கார்களால் பறக்க கூட முடியுமாம். விமானத்தை போல இறக்கைகள் இருந்தால் இவையும் பறக்கும். இறக்கைகள் இல்லாமல் கூட பல ரேஸ்களில், கார்களின் முன்பக்கம் தூக்கி, சில வினாடிகள் வானில் இருந்து பின் கீழே விழும் சம்பவங்களும் நடந்துள்ளன. இதை தடுப்பதற்காகவே, 'ஸ்பாய்லர்ஸ்' எனும் பாகங்கள் கார்களில் இணைக்கப்படுகின்றன. இவை 'டவுன்போர்ஸ்' என்ற பண்பை அதிகப்படுத்தி, அந்த காரை தரையில் வைத்துகொள்கிறது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close