38 நிமிடங்களில் முடிவுக்கு வந்த போர்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
வரலாறுகளில் பல மாதங்கள், பல வருடங்கள் நடந்த போரினைப் பற்றி எல்லாருமே தெரிந்திருப்போம். ஆனால், 1896 - ல் கிழக்கு ஆப்பிரிக்க நாடான ஜான்ஸிபாரில் நடந்த போர் வெறும் 38 நிமிடங்களிலேயே முடிவுக்கு வந்தது. இதனால், வரலாற்றில் மிக வேகமாக முடிவுக்கு வந்த போர்களின் பட்டியலில் முதல் இடத்தில் உள்ளது. 1890 - களில் ஜான்ஸிபார் மன்னர் ஹம்மாத் பின் துவைனி, பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில் ஆட்சி செய்து வந்தார். அவரின் மறைவிற்குப் பின்னால், ஆட்சியமைக்க ஆசை கொண்ட காலித் பின் பர்காஷ், ஜெர்மனியின் ஆதரவோடு பிரிட்டிஷை எதிர்த்தார். இதனால், கோபமடைந்த பிரிட்டிஷ் ராணுவம், தன்னுடைய 2 ராணுவக் கப்பல்களின் உதவியால், ஜான்ஸிபார் கோட்டையை சுக்குநூறாக ஆக்கியது. காலித் பின் பர்காஷிற்கு ஆதரவாக இருந்த 3000 வீரர்களில், 500 பேர் கொல்லப்பட, 1000 க்கும் மேற்பட்ட வீரர்கள் காயமடைந்தனர். 38 நிமிடங்களில் கோட்டைக்குள் நுழைந்த பிரிட்டிஷார் காலித்தை கைது செய்தனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close