ஒரே இரவில் 800 குடும்பங்களை கொன்ற 'விஷ ஏரி'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள கேமரூனின் வடமேற்கு பகுதியில் 'நியோஸ்' ஏரி அமைந்துள்ளது. எரிமலை வெடிப்பின் போது உண்டான பள்ளத்தில் நீர் தேங்கியதால் இந்த ஏரி உருவாகியதாக நிலவியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவிக்கின்றனர். இதில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நீர் தேங்கிக் கிடந்ததால், அதிக அழுத்தம் ஏற்பட்டு விஷ வாயுக்கள் அவ்வப்போது வெளிப்பட்டு வந்தன. இந்நிலையில் 1986 ஆகஸ்ட் 21 - ம் தேதி இரவு, ஏரியில் இருந்து டன் கணக்கில் வெளியான கார்பன் டை ஆக்ஸைடு காற்றில் கலந்து, மணிக்கு 60 மைல் வேகத்தில், அந்த பகுதியைச் சுற்றி சுமார் 25 கி.மீ தொலைவிற்கு பரவியது. இதனால், அங்கிருந்த 800 குடும்பங்களைச் சேர்ந்த 1746 பேர் மூச்சுத்திணறி இறந்துள்ளனர். 3000 க்கும் அதிகமானோர் மயக்கநிலையில் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டதால் உயிர் பிழைத்துள்ளனர். இதை ஆராய்ந்த ஃபிரான்ஸ் விஞ்ஞானிகள், நிலத்தட்டுகளில் ஏற்பட்ட சிறுநகர்வு காரணமாக ஏரியில் இருந்து விஷவாயு வெளிப்பட்டதாக தெரிவித்தனர். மேலும், வாயுக் கசிவினை முன்கூட்டியே அறிய சோலார் முறையில் இயங்கும் அலாரம்களையும் பொருத்தி உள்ளனர். இன்றுவரை 'நியோஸ்' ஏரியின் மாற்றங்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close