பாப்கார்னுக்கு வயசு என்ன தெரியுமா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தியேட்டர், திருவிழான்னு சுத்தும்போது நிச்சயம் நம்ம எல்லாரும் பாப்கார்ன் வாங்கி சாப்பிட்டுருப்போம். அவ்ளோ ருசி மிகுந்த பாப்கார்ன் 5000 வருசத்துக்கு முன்னாடி இருந்தே இருக்குதாம். அமெரிக்காவின் தென்மேற்கு பகுதி, மெக்ஸிகோ, பெரு ஆகிய இடங்களில் இதற்கான வரலாற்று சான்றுகளும் உள்ளதாம். சரி, பாப்கார்ன் சாப்பிடறது உடலுக்கு நல்லதா..கெட்டதா..? னு யோசிச்சா, பாப்கார்ன்ல நிறைய நல்ல விஷயங்கள் இருக்குதாம். பாப்கார்ன்ல மாங்கனீசு, துத்தநாகம், தாமிரம், பொட்டாசியம்னு உடலுக்குத் தேவையான சத்துக்கள் உள்ளதாம். இதுபோக, வைட்டமின் B3, B6 - ம் இருக்கின்றதாம். இதனால், இரத்தத்தில் சர்க்கரை அளவு கட்டுப்படுத்தப் படுகின்றதாம். செரிமானம், உடல் எடை, கொழுப்பு ஆகியவை சீராக இருப்பதற்கும் பாப்கார்ன் உதவி செய்வதோடு புற்றுநோய் பாதிப்பில் இருந்து பாதுகாக்கின்றதாம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close