பேசக்கூடிய, சிரிக்கக்கூடிய புத்தகம் தெரியுமா..???

  நந்தினி   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
டென்மார்க்கில் இயங்கி வரும் ஒரு நூலகத்தில் தான் பேசும் புத்தகங்கள் உள்ளன. இது ஒரு மனித நூலகம் (Human Library). இங்கு மக்கள் தான் புத்தகங்கள். இந்த நூலகத்தில் வித விதமான மனிதர்கள் இருக்கின்றார்கள். அவர்களுடன் உரையாடி அவர்களின் வாழ்க்கை கதையை, அவர்களின் வாழ்வில் நிகழ்ந்த சுவையான சம்பவங்களை கேட்டு தெரிந்து கொள்ளலாம். பாலியல் தொழிலாளர்கள், அனாதைகள், திருநங்கைகள், அகதிகள் என மனித புத்தகங்கள் இங்கு ஏராளமாக உள்ளன. 2000 - ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட இந்த நூலகம் இன்று உலகெங்கும் 70 க்கும் மேற்பட்ட நாடுகளில் இயங்கி வருகின்றது. மனித நேயத்தை மறந்து வரும் இன்றைய உலகில் இப்படி ஒரு நூலகம் அவசியம் என இந்த நூலகத்தின் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close