ட்விட்டரில் தினமும் 20 கோடி வார்த்தைகள் பேசுறாங்களாம்..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

சமூக வலைதளங்களில் முக்கியமான ஒன்றாக ட்விட்டர் செயல்பட்டு வருவது நம் அனைவருக்குமே தெரியும். உலகெங்கும் உள்ள முக்கிய பிரமுகர்கள் தங்கள் கருத்துக்களை ட்விட்டரில் தான் பதிவு செய்கின்றனர். இந்த ட்விட்டரில் தினமும் பதிவிடப்படும் வார்த்தைகள் 20 கோடியைத் தாண்டுகின்றதாம். இந்த வார்த்தைகளை புத்தகமாக மாற்றினால் 10 கோடி பக்கங்கள் வருமாம். இதை படித்துமுடிக்க 31 ஆண்டுகள் ஆகுமாம். வெறும் ஒருநாள் மட்டும் பேசக்கூடிய வார்த்தைகளை புத்தகமாக மாற்றினால், டால்ஸ்டாயின் 'போரும் அமைதியும்' நாவலை 8000 பிரதிகள் எடுக்கும் அளவிற்கு இருக்கும் என்றும், அதையெல்லாம் அடுக்கி வைத்தால் மலேசியாவில் உள்ள 1483 அடி உயரமுள்ள Petronas Towers - ன் அளவைத் தொடும் என்றும் கணக்கிட்டு உள்ளனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close