கோயில்களில் மணி அடிப்பது ஏன்..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
கோயில்களில் மணி அடித்து இறைவனை வணங்குவது இந்துக்கள் மற்றும் சில கிறிஸ்தவ அமைப்பினர்களிடம் வழக்கம். இந்த பழக்கம் வீடுகளில் பூஜை செய்யும் போதும் இந்துக்களின் வழக்கத்தில் உண்டு. மணியிலிருந்து எழும் ஒலி 'ஓம்கார' ஒலியைக் கொண்டது. இந்த பிரபஞ்சம் 'ஓம்' என்ற ஓம்கார ஒலியிலிருந்து உருவானது என்ற கருத்து உண்டு. இந்த ஓம்கார ஒலிதான் உயிர்களின் மூலம். கோயில் மணியை ஒலிக்கும் போது அதில் இருந்து வெளியாகும் இந்த ஓம்கார அதிர்வுகள் தீய எண்ண அலைகளை அழிக்கும் சக்தி கொண்டவையாக உள்ளன. மேலும், இந்த ஒலி நம் மனதை ஒரு நிலைப்படுத்தி ஓர் எண்ணத்தில் குவியவைக்கின்றது. இறைவனை தொழும் நேரத்தில் மனதை ஒருநிலைப்படுத்தி அவன் நினைவாக என்ணம் இருக்க இந்த மணியோசை உதவுகின்றது. மேலும், பண்டைய காலங்களில் உடல் நலம் சுகமில்லாதவர்களும், வேலைக்கு செல்பவர்களும் குறித்த நேரத்தில் கோயிலுக்கு செல்ல முடியாது. கோயில்களில் இருக்கும் இந்த பெரிய மணிகளின் ஒலிச்சத்தத்தை கேட்குபோது ஒரு கணம் அவர்கள் இருக்கும் இடத்திலேயே கடவுளை நினைத்து வணங்கிக் கொள்வார்களாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close