ஆப்பிரிக்காவின் 'புல்லட் ப்ரூப்' மூலிகை!

  arun   | Last Modified : 10 Mar, 2017 11:49 am

2001-ஆம் ஆண்டு, வடக்கு ஆப்பிரிக்க நாடான கானாவில், துப்பாக்கிக் குண்டினால் துளைக்க முடியாத வகையில் உடலை 'புல்லட் ப்ரூப்' ஆக மாற்ற பலர் முயற்சித்தனர். அங்குள்ள ஜூஜூமேன் எனப்படும் மந்திரவாதியின் பேச்சை கேட்டு, 15 பேர், 2 வாரங்களாக மூலிகைகளை அரைத்து அதை உடலில் தேய்த்து வந்தனராம். பின்னர், அது உண்மையிலேயே வேலை செய்கிறதா என சோதிக்க அலியோபிகா அபெரிமா என்றவர், தன்னை சுடச்சொல்லி அந்த மந்திராவதியிடம் போய் நின்றாராம். அனைவரது அதிர்ச்சிக்கும், அந்த குண்டு தாக்கி அங்கேயே அபெரிமா பலியாகியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த மந்திரவாதிக்கு தர்ம அடி விழுந்தது. பொதுவாகவே பல ஆப்பிரிக்க நாட்டு மக்கள், இதுபோல மந்திர தந்திரங்கள் மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளனர். சில மாதங்களுக்கு முன் ருவாண்டா என்ற ஆப்பிரிக்க நாட்டில் நடந்த ஒரு கால்பந்து போட்டியில், இரு அணி வீரர்களும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் சூனியம் வைத்து தோற்கடிக்க முயன்ற சம்பவம் மிக பிரபலம்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close