அப்பாவின் உயிரைக் காப்பாற்றிய 'மீம்ஸ்' சிறுவன்

  jerome   | Last Modified : 10 Mar, 2017 04:15 pm

பொழுதுபோக்கிற்காக தொடங்கிய 'மீம்ஸ்' கலாச்சாரம், இன்று புரட்சி ஏற்படுத்தக் கூடிய அளவில் வளர்ந்துள்ளது. 'மீம்ஸ்' ற்காக பல நகைச்சுவை நடிகர்களின் புகைப்படம், திரைப்படக் காட்சிகள் பயன்படுத்த படுகின்றது. அதேபோல் தான் 2007 ஆம் ஆண்டில் 'ஷாமி' கடல் மண்ணில் விளையாடிய புகைப்படம் அவரின் அம்மாவால் ஃப்ளிக்கர் இணையத்தளத்தில் மீம்ஸாக வெளியானது. தற்செயலான இந்த நிகழ்வு இன்றைய மீம்ஸ்களில் முக்கியமான ஒன்றாக 'SUCCESS KID MEME' என்ற பெயரில் பிரபலமாகி உள்ளது. அமெரிக்காவின் வெள்ளைமாளிகை ஊழியர்கள் கூட ஷாமியின் புகைப்படத்தை விலைக்கு வாங்கி மீம்ஸிற்காக பயன்படுத்தினர். இந்த மீம்ஸ் ஒரு பக்கம் பிரபலமாகிக் கொண்டிருந்தாலும், ஷாமியின் அப்பா சிறுநீரகக் கோளாறால் பாதிக்கப்பட்டு இருந்தார். அதனால், ஷாமியின் அம்மா சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக இணையத்தில் பண உதவி கேட்டார். உடனடியாக 4000 நன்கொடையாளர்கள் சேர்ந்து 60 லட்சம் ரூபாய் கொடுத்ததால் இன்று நலமாக உள்ளார். இதனால், ஷாமி உண்மையில் 'SUCCESS KID' தான் என்று அந்நாட்டு ஊடகங்கள் கூறி வருகின்றன. இப்போது 9 வயதை தொட்டுவிட்ட ஷாமி, ஓவியப்பள்ளியில் படித்து வருகின்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.