குழந்தைகளின் அழுகையை எப்படி நிறுத்துவது..?

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
குழந்தை அழுது கொண்டேதான் பிறக்கிறது ஆனால் யாரையும் அழவைக்கத் தெரியாத ஒரு உயிர் குழந்தை மட்டுமே. குழந்தைகள் என்றுமே மனதிற்கு மகிழ்ச்சியும் நிம்மதியும் கொடுக்கும் ஒரு ஜீவன். இந்த சின்னஞ் சிறு பாதங்களுக்கு சொந்தமான ஜீவன் அழுவது ஏன்? எப்படி அழுகையை நிறுத்துவது? குழந்தைகள் பசிக்காகத்தான் பெரும்பாலான நேரங்களில் அழுகின்றனர். ஏனென்றால் குழந்தைகளின் குடல் மிகச் சிரியதாக இருப்பதோடு பால் வெகு சீக்கிரத்தில் ஜீரணித்து விடும். குழந்தைகள் பசிக்காக அழும் நேரங்களை குறித்து கொள்ளுங்கள். தாய்பால் கொடுக்கும் தாய்மார்கள் குழந்தை பசிக்கும் நேரம் வந்தவுடன் தயாராக இருங்கள். புட்டி பால் கொடுப்பவர்கள் குழந்தை அழும் முன்னமே பாலை தயார் செய்து விடுங்கள். உங்கள் குழந்தையின் நாப்கினை முடிந்தளவிற்கு அடிக்கடி மாற்றுங்கள். குழந்தைக்கு 'டயபர்' அணிவித்தால் ஒரு நாள் முழுவதும் இரு டயபர்கள் மட்டுமே மாற்றாதீர்கள். இது குழந்தைக்கு அசௌகரியத்தையும், தோல் தொடர்பான வியாதிகளையும் கொடுக்கும். முடிந்தளவு குழந்தைகள் கழிவுகள் வெளியாக்கிய உடனேயே டயபர்களை மாற்றிவிடுங்கள். இது உங்கள் குழந்தையை தூய்மையாக வைப்பதோடு தேவையில்லாத அழுகையை நிறுத்தும். குழந்தைக்கு தட்ப வெட்ப சூழலுக்கு ஏற்ற ஆடைகளை அணியுங்கள். ஆடைகள் அழகாக இருக்கின்றது என்று அவர்களுக்கு ஒத்து வராத ஆடைகளை அணியாதீர்கள். உங்கள் குழந்தைகள் சௌகரியமாக இருந்தாலே அழவேண்டிய அவசியம் இல்லாமல் போகும். பசி, அசௌகரியம் போக குழந்தைகள் அழுவதற்கு வலியும் ஒரு காரணம். சில குழந்தைகள் கொசு கடித்தாலே வலி தாங்காமல் அழும். முடிந்தளவு குழந்தைகளை கொசு வலையில் படுக்க வையுங்கள். இரவு நேரங்களில் கதவு, மற்றும் ஜன்னல்களை மூடியே வையுங்கள். குழந்தையை கொசு கடித்தால் தானே அழும். சில குழந்தைகளுக்கு இயல்பாகவே குடல் சிறியதாக இருக்கும், சுவாசக் குழாயின் அளவு சிறியதாக இருக்கும், தோல் மிக மிருதுவாக இருக்கும். இந்த விஷயங்களை கேட்டறிந்து குழந்தைகளுக்கு ஏற்ற உணவையும் பராமரிப்பையும் கொடுங்கள். இது குழந்தையை ஆரோக்கியமாக வைத்திருக்கும். இதையும் தாண்டி குழந்தை அழ ஆரம்பித்தால் மருத்துவரை காணுங்கள். முடிந்தளவு குழைந்தகளுக்கு அதிக மருந்துகளை கொடுத்து பழக்காதீர்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close