கடவுளை வழிபட கற்பூரம் ஏற்றுவது ஏன்..???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கற்பகிரகத்தில் இருக்கும் கடவுளின் சிலை, புகை மற்றும் எண்ணெயால் மாசுபடக்கூடாது என்பதற்காக விளக்கினால் தான் ஒளியேற்றப்பட்டிருக்கும். இதனால் கடவுளை வணங்கும் போது கற்பூரம் ஏற்றுவதால் கடவுளின் முகம் இருள் நீங்கி பிரகாசமாகத் தெரியும். மேலும் கற்பகிரகத்தைப் போல் நம் உள்ளமும் இருள் நீங்கி ஒளி பெற வேண்டும் என்றும் பொருள்படும். கற்பூரம் ஏற்றுவதால் சுற்றி இருக்கும் தேவையில்லாத கிருமிகளும் அழிகின்றன. இதனால் கடவுளை வணங்கும் போது சுற்றுச்சூழல் தூய்மையாகிறது. இதுமட்டுமில்லாமல் கற்பூரம் ஏற்றும் போது திடமாக இருக்கும் கற்பூரம் திரவமாக கரைந்து காற்றில் கலப்பது போல், தூய்மையான உள்ளமும், தீமை நீங்கி இறைவனில் கரையும் என்று பொருள்படும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close