• மாலத்தீவின் புதிய அதிபருக்கு பிரதமர் மோடி நேரில் வாழ்த்து
  • பாராட்டிய ஸ்டாலின் தற்போது குற்றச்சாட்டு?
  • வெளிநாட்டிற்கு அறிவை பயன்படுத்துவதால் இந்தியா பின்தங்கியுள்ளது: இஸ்ரோ சிவன்
  • நீதிபதியாக பதவியேற்கும் கூடுதல் தலைமை வழக்கறிஞர் புகழேந்தி
  • புரோ கபடி லீக்:பெங்கால் வாரியர்ஸ் அணிக்கு 5வது வெற்றி

GPS இல்லாம விமானத்தை எப்படி தரையிறக்குனாங்க தெரியுமா?

  jerome   | Last Modified : 13 Mar, 2017 05:41 pm

முதல் உலகப்போரின் போது தயாரிக்கப்பட்ட போர் விமானங்கள் எஞ்சியதால், அமெரிக்க அரசு அவைகளை தபால் துறைக்கு உதவும் விதமாக பயன்படுத்தியது. சான் ஃபிரான்ஸிஸ்கோவில் இருந்து நியூயார்க் வரை இந்த தபால் சேவை தொடங்கப்பட்டது. இந்த இரண்டு நகரங்களுக்கும் இடையே இருந்த நிலப்பரப்பு வெறும் மலைகளும், மண்பரப்புகளை மட்டுமே உடையது. இதனால், தபால் சேவையில் உள்ள விமானிகள் தங்கள் செல்லும் பாதையை எளிதில் தெரிந்து கொள்வதற்காக அமெரிக்க அரசு நூதனமான முறையை பயன்படுத்தியுள்ளது. ஏனெனில், அன்றைய காலகட்டத்தில் GPS வசதிகள் இல்லை. அதனால், அந்த நிலப்பரப்புகளில் ஒவ்வொரு 10 மைல் தூரத்திற்கும் 50-70 அடி அளவிலான அம்புக்குறி வடிவில் கான்கிரீட் தளங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அம்புக்குறிகள் அருகிலேயே 30 அடி உயரத்தில் சுழன்று இயங்கக் கூடிய விளக்குகள் பொருத்தப்பட்ட உயர் கோபுரங்களையும் அமைத்துள்ளது. வானில் பறக்கும் விமானிகள் இதை கவனித்து, விமானத்தை இயக்கி தங்கள் இலக்கை எளிதாக அடைந்து தபால் சேவையை செய்து வந்துள்ளனர். முதல் உலகப்போரில் பணியாற்றிய திறமையான ராணுவ விமானிகள் மட்டும் இந்த சேவைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளனர்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.