வெறும் 95 ஆண்டுகளிலேயே முடிவுக்கு வந்த அமெரிக்கப் பேரரசு..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மனித இனம் தோன்றிய நாளில் இருந்து, இந்த பூமியின் தனித்தனியான நிலப்பரப்புகளை, வேறு வேறு காலகட்டங்களில் நிறைய பேரரசுகள் ஆட்சி செய்தன. சாதாரண அரசிற்கும், பேரரசிற்கும் உள்ள வித்தியாசமே அந்த அரசின் ஆட்சித்திறமையும், அந்த மக்களின் கலாச்சாரமும் தான். ஆனால், 13-ஆம் நூற்றாண்டில் அமெரிக்காவின் இன்றைய பெரு நாடு அமைந்திருக்கும் பகுதியில் உருவான 'இன்கா' பேரரசு வெறும் 95 ஆண்டுகள் மட்டுமே நிலைத்திருக்க முடிந்திருக்கின்றது. இருப்பினும், இன்கா இன மக்கள் தங்களுக்கான மொழியையும், கலாச்சாரத்தையும் உருவாக்கி வரலாற்றில் இன்றும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றனர். அமெரிக்கோ வெஸ்புகியும், கொலம்பஸும் அமெரிக்காவிற்கு பயணிக்கும் வரை, மேற்கத்திய நாடுகள் அமெரிக்காவை அறிந்திருக்கவில்லை. அந்த காலகட்டத்தில் தான் 'இன்கா' கலாச்சாரம் தலையெடுக்க தொடங்கியதாக வரலாற்று வல்லுநர்கள் கூறுகின்றனர். 12-ஆம் நூற்றாண்டு வரை பழங்குடியினராக இருந்த இன்கா மக்கள் 'மன்க்கோ கப்பாக்' என்பவரின் கீழ் 'கசுக்கோ' என்ற சிறிய நகர அரசை அமைத்தனர். பின்னர் 'சாப்பா இன்கா பச்சாகுட்டி'-யின் ஆட்சி காலத்தில் இது மேலும் விரிவடைந்தது. இவரும் இவரது மகனும் இவரது ஆட்சிக்காலத்தில் ஆண்டீஸ் மலைத்தொடரின் பெரும்பகுதியை இன்காக்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். சுமார் 4 லட்சத்திலிருந்து 12 லட்சம் மக்கள் இந்த பேரரசின் கீழ் வாழ்ந்திருக்கலாம் என தொல்லியல் ஆய்வுகளின் அடிப்படையில் கணிக்கப் படுகின்றது. இன்கா பேரரசில் ஒரு எழுதப்பட்ட மொழி இல்லை என்பதால், 'குவெச்சுவா' என்ற பேச்சு மொழியை தான் பயன்படுத்தினர். இது தவிர பல்வேறு பகுதிகளிலும் வட்டார மொழிகள் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளன. அந்நிய நாடுகளுடன் வாணிபம் செய்ததற்கான சான்றுகளும் உள்ளன. 1438-ல் உருவான இந்தப் பேரரசு 1533-ல் வெறும் 180 ஸ்பெயின் வீரர்களால் தோற்கடிக்கப்பட்டு, ஸ்பெயின் உண்டாக்கிய காலனி நாடுகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டது என்பது வரலாற்றில் மறக்கமுடியாத ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close