ஜேம்ஸ் கேமரூனா...??? இப்படியும் ஒரு சாதனையா..???

  jerome   | Last Modified : 13 Mar, 2017 06:25 pm
உலகெங்கும் சினிமா ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறச் செய்து, அதை திருப்தியடைய செய்த திரைப்படம் அவதார். அதன் இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் யாருக்கும் தெரியாமல் ஒரு உலக சாதனையை செய்திருக்கின்றார். நம் பூமியின் மிக ஆழமான பகுதி மரியானா அகழி. பசிபிக் பெருங்கடலில் சுமார் 10,924 மீட்டர்கள் (35,840 அடிகள்; 6.78 மைல்கள்) ஆழமுடைய இந்த பகுதிக்கு தனி ஒருவராக சென்று திரும்பியுள்ளார் கேமரூன். இவருக்கு முன் 1960-ல் அமெரிக்கக் கடற்படை வீர்ர டொன் வால்ஷ் என்பவரும், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பெருங்கடல் குறிப்பு வல்லுநர் சாக் பிக்கார்ட் என்பவரும் மரியானா அகழியின் அடிப்பகுதிக்குச் சென்றனர். பல ஆண்டுகள் ஆய்வு செய்த பின்தான், இந்த பகுதியின் ஆழம் என்னவென்று என்பதே உறுதி செய்யப்பட்டது. இன்றும் அமெரிக்க மற்றும் ஜப்பான் விஞ்ஞானிகள் பலர் இந்த பகுதியில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். சமீபத்தில் நடந்த அறிவியல் பற்றிய உலகநாடுகளின் கருத்தரங்கில் அணுக்கழிவுகளை சேமிப்பதற்கு மரியானா அகழி சிறந்த இடமாக இருக்குமென்று ஆலோசிக்கப் பட்டது. இந்த அகழியில் இதுவரை அறிந்திடாத கடல் வாழ் உயிரினங்கள் வாழ வாய்ப்புள்ளதாக கடல் வாழ் உயிரின ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். நிலவிற்கு கூட இதுவரை 12 பேர் சென்றுள்ளனர்.ஆனால், மரியானா அகழிக்கு 3 பேர் மட்டுமே சென்று திரும்பியுள்ளனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close