காரை பைக்காக மாற்றி உயிர் பிழைத்த இளைஞர்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த எமிலி லெராய் என்பவர் 1993-ஆம் ஆண்டு ஆப்பிரிக்காவின் மொராக்கோ பகுதியை தன்னுடைய காரில் சுற்றிப்பார்க்க சென்றுள்ளார். மொராக்கோ ராணுவத்தினர் எமிலியை, தடை செய்யப்பட்ட பகுதிக்குள் செல்ல அனுமதிக்கவில்லை. ஆனால், இதற்கு முன் 10 தடவை அந்த பகுதியில் பயணம் செய்த அனுபவத்தில் ராணுவத்தினருக்கு தெரியாமல், பாறைகள் அதிகம் நிறைந்த பகுதி வழியே தன் காரை ஓட்டியுள்ளார். பாறைகளில் மோதிய கார் சுக்குநூறாக உடைய, எமிலி அந்த பகுதியில் யாரையும் தொடர்புகொள்ள முடியாதபடி சிக்கித் தவித்துள்ளார். எமிலியின் நல்லநேரம் அவரிடம் 10 நாட்களுக்குத் தேவையான தண்ணீரும், உணவும் இருந்திருக்கின்றது. மெக்கானிக்கல் வேலை தெரிந்த எமிலி, உடைந்த தன் கார் பாகங்களை ஒன்று சேர்த்து பைக் மாடலில் ஒரு வாகனத்தை தயார்செய்ய துவங்கியுள்ளார். பல போராட்டத்திற்குப் பின் 12 நாள் கழித்து பைக்கை தயார் செய்து அங்கிருந்து தப்பி வந்துள்ளார். இந்த சம்பவத்தால் இரும்பு மனிதன் என்று பெயர் வாங்கிய எமிலி லெராய்க்கு இப்போது வயது 62 ஆகிவிட்டது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close