'இவர்' இல்லைன்னா ஹிட்லரே இல்ல...!!!

  jerome   | Last Modified : 14 Mar, 2017 02:09 pm
இன்றுவரை உலக வரலாற்றில் சர்வாதிகாரி என்ற சொல்லுக்கு ஒரே சொந்தக்காரர் ஹிட்லர் மட்டும் தான். லட்சக்கணக்கான யூதர்களை கொன்று குவித்து இரண்டாம் உலகப்போருக்கு வித்திட்ட ஹிட்லர், முதல் உலகப்போரின் போது ஜெர்மனியின் சார்பாக சாதாரண ராணுவ வீரராகத்தான் செயல்பட்டார். முதல் உலகப்போரில் ஜெர்மன் கூட்டுப்படைகள், பிரிட்டிஷ் கூட்டுப் படையிடம் தோல்வியைத் தழுவின. அந்த சூழ்நிலையில், பிரிட்டிஷிற்கு ஆதரவாக செயல்பட்ட பிரான்ஸ் படையினர், அந்நாட்டில் உள்ள மார்கோயிங் என்ற கிராமத்தில் இருந்த ஜெர்மன் ராணுவ வீரர்களை சுட்டுக் கொன்று கொண்டிருந்தனர். ஜெர்மன் வீரர்கள் தங்கள் ஆயுதங்களை எடுக்கக் கூட முடியாமல் சக்தியிழந்து நின்றுள்ளனர். அப்போது, பிரான்ஸ் படைக்கு தலைமை வகித்த ஹென்றி டாண்டே என்ற ராணுவத் தளபதி, உடல் முழுதும் காயப்பட்டு தவித்துக் கொண்டிருந்த ஒரு ஜெர்மன் வீரர் மேல் இரக்கப்பட்டு, தப்பிப்போக அனுமதித்துள்ளார். ஹென்றியிடம் உயிர்ப்பிச்சை வாங்கிய அந்த ஜெர்மன் வீரர் தான் அடுத்த 20 ஆண்டுகளில் உருவான இரண்டாம் உலகப்போருக்கு அடித்தளமிட்ட ஹிட்லர். இந்த சம்பவத்தை இத்தாலியயைச் சேர்ந்த ஃபார்டுனோ மட்டானியா என்ற ஓவியர் தத்ரூபமாக வரைந்து உள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close