இருட்டில் மின்னும் 'ஜிகுஜிகு' தவளை கண்டுபிடிப்பு!

  arun   | Last Modified : 15 Mar, 2017 04:36 am

அர்ஜன்டினாவில் இருட்டில் மின்னும் திறன் கொண்ட fluorescent தவளைகளை ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டறிந்துள்ளனர். பகலில் பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு ஆகிய வண்ணங்களில் காணப்படும் இவை, இரவில் பச்சை அல்லது நீல நிறத்தில் மின்னுகின்றன. குறைந்த ஒளி அலைகளை ஈர்த்துக் கொண்டு, நீண்ட ஒளி அலைகளாக இவை வெளிப்படுத்துவதே இதற்குக் காரணம். இச்செயலுக்கு, hyloin-L1, hyloin-L2 மற்றும் hyloin-G1 ஆகிய மூன்று மூலக்கூறுகளும் உதவுகின்றன. நில-நீர் வாழ் உயிரினங்களில் இத்தவளைதான் வெளிச்சத்தை உமிழும் முதல் உயிரினமாகும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close