முதல் உலகப்போரின் 'ரியல் ஹீரோ' ஒரு புறாவா...???

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

அன்றைய காலங்களில் போர்களின் போது தகவல் பரிமாற்றத்திற்காக புறாக்கள் பயன்படுத்தப்பட்டு வந்தன. இரண்டு உலகப்போர்களிலும் அமெரிக்காவின் சார்பாக சுமார் 1 லட்சம் புறாக்கள் இந்த வேலைகளை செய்துள்ளன. இதில் செர் அமி (Cher Ami) என்ற புறா தன்னுடைய உயிரை பணயம் வைத்து, 200 அமெரிக்க வீரர்களின் உயிரைக் காப்பாற்றி வரலாற்றில் இடம் பிடித்துள்ளது. முதல் உலகப் போர் நடந்த 1918 அக்டோபர் 3 ல், பிரான்ஸ் எல்லைப்பகுதியில் சுமார் 500 அமெரிக்க வீரர்கள், ஜெர்மன் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டு உள்ளனர். அடுத்த நாளில் 300 வீரர்கள் கொல்லப்பட்டு 200 வீரர்கள் மட்டும் உணவு, ஆயுதம் எதுவுமின்றி ஆபத்தான நிலையில் இருந்துள்ளனர். இந்த விஷயத்தை ராணுவ தலைமையகத்துக்கு தெரியபடுத்த தங்களிடம் இருந்த மூன்று புறாக்களில் முதல் இரண்டை அனுப்ப, அவைகளை ஜெர்மன் படையினர் சுட்டுக் கொன்று விட்டனர். கடைசியாக செர் அமியை அனுப்பும்போது, ஜெர்மன் படை அதையும் சுட்டுள்ளனர். நெஞ்சில் குண்டு பாய்ந்த செர் அமி, அதையும் தாங்கிக் கொண்டு பறந்து இலக்கை அடைந்துள்ளது. செர் அமி தன் நெஞ்சில் ஒரு தோட்டாவுடன், தன்னுடைய ஒரு கண், ஒரு காலையும் இழந்து 200 பேரை காப்பாற்றியுள்ளது. Cher Ami என்றால் பிரெஞ்சு மொழியில் 'அன்புள்ள நண்பா' என்று அர்த்தம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.