பிப்ரவரி 14 இல்லைன்னா ஏப்ரல் 14..!! டோன்ட் வொர்ரி சிங்கிள்ஸ்..!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகெங்கும் உள்ள காதலர்கள் பிப்ரவரி 14-ல் காதலர் தினம் கொண்டாடுவது அனைவரும் அறிந்ததே. ஆனால், அந்த நாளன்று ஜோடி கிடைக்காமல், அந்த நாளுக்கும் அவங்களுக்கும் சம்பந்தமே இல்லாமல், உலகத்தை வெறுத்து உலா வந்துகொண்டிருக்கும் 'சிங்கிள்ஸ் சிட்டிசன்ஸ்' களுக்காக ஏப்ரல் 14 அன்று கறுப்பு தினம் கொண்டாடப் படுகின்றது. இந்த கறுப்பு தினத்தை கொரியாவில் வெகு விமரிசையாக கொண்டாடுகின்றனர். இந்த நாளில் கறுப்பு ட்ரெஸ், கறுப்பு செருப்பு, கறுப்பு லிப்ஸ் ஸ்டிக், கறுப்பு நெய்ல் பாலிஷ்னு எல்லாமே கறுப்பு மயமாகத்தான் இருக்குமாம். இவ்ளோ ஏன் சாப்பாடு கூட கறுப்பு கலர் நூடுல்ஸ் தான் சாப்பிடுவாங்களாம். இந்த கொண்டாட்டத்தில் சிங்கிள்ஸ் மட்டும்தான் கலந்து கொள்ளவேண்டுமாம். ஏன்னா.. ஒரு சிங்கிளோட மனசு இன்னொரு சிங்கிளுக்குத்தான் புரியும்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close