சிரிச்சாக் கூட சாவு வருமா...? என்ன கொடுமை சார் இது..!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
'வாய் விட்டு சிரித்தால், நோய் விட்டுப் போகும்' னு சொன்னவங்க உயிரே விட்டுப் போகும்னு சொல்லாம போயிட்டாங்க. நல்லா 'கல கல' ன்னு சிரிக்கிறது பார்க்கிறதுக்கு எவ்ளோ அம்சமா இருக்குதோ, அதே அளவுக்கு ஆபத்தாகவும் இருக்கின்றது என மருத்துவர்கள் கூறுகின்றனர். அளவுக்கு மீறி சிரிக்கும் போது, மூளையில் உள்ள இரத்த நாளங்கள் உடைய வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாம். மேலும் மாரடைப்பு, குடலிறக்கம், சிரித்தல் வலிப்பு, மூச்சுத் திணறல் போன்றவையும் உண்டாவதால் உயிரிழக்க நேருமாம். உலகளவில் இப்போது வரை சிரிக்கும் போது இறந்தவர்கள் 10 பேர் தான் என்று ரெக்கார்ட்ல இருக்கு. ஆனா, கணக்குல வராம இருக்கும் மரணங்கள் எவ்ளோன்னு சொல்ல முடியலன்னு மருத்துவர்கள் சொல்றாங்க. கி.மு 5 ஆம் நூற்றாண்டில் இருந்தே இப்படியான மரணங்கள் நிகழ்ந்து வருகின்றன. இன்னைக்கு இருக்குற கடுப்பான வாழ்க்கைல, 'ஜாலியா..க்யூட்டா' நாமளும் சிரிச்சு மத்தவங்களையும் சிரிக்க வைக்கும் போது வரும் சாவு கூட ஒரு வரம் தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close