2 நிமிஷம் பார்த்தா போதும்... காதல் பத்திக்கும்..!!!

  jerome   | Last Modified : 17 Mar, 2017 06:36 pm
பருவம் வந்த எல்லாருக்குமே ரொம்ப 'அசால்ட்டா' வரக்கூடிய ஒரு விஷயம் காதல். பலபேர் இந்த காதலுக்காக வாழ்க்கையையே கூட தியாகம் பண்ணிருப்பாங்க. ஆனால், இதுவும் ஒரு சயின்ஸ் தாங்க. எல்லாமே ஹார்மோன்கள் சம்மந்தப்பட்ட விஷயம் தான். ஒருத்தர் மேல காதல் வருவதற்கு அவங்க கண்களை உற்றுப் பார்த்தால் போதுமாம். அவங்க விசுவாமித்திரரா இருந்தாலும் சரி, கணினி கால கண்ணகியா இருந்தாலும் சரி காதல் கன்ஃபார்மா வரும்னு உளவியல் நிபுணர்கள் சொல்றாங்க. ஏன்னா, அப்படி உற்றுப் பார்க்கும்போது நமது உடலில் சில மாற்றங்கள் ஏற்பட்டு 'பினைல்தைலமைன்' எனும் வேதிப்பொருள் சுரந்து நம்மை அவர்கள் மேல் ஈர்ப்பு கொள்ளச் செய்துவிடுமாம். கண்களை அதிகம் பார்க்க பார்க்க தான் காதல் அதிகரிக்கிறதாம். சில தருணங்களில், வெறும் 2 நிமிடங்கள் கண்களை உற்று பார்த்ததிலேயே காதல் உண்டாகி, திருமணம் வரை சென்றதுண்டாம். பல வருடங்கள் இணைந்திருக்கும் ஜோடிகள், ஒருவரை ஒருவர் பார்த்து பேசும்போது கண்களை தான் நோக்குகிறார்கள் என ஆய்வாளர்கள் அடித்துச் சொல்கிறார்கள்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close