இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் ஒண்ணு தான்..!!!

  jerome   | Last Modified : 20 Mar, 2017 12:25 pm

பல கோடி ஆண்டுகளுக்கு முன் பூமியின் நிலத்தட்டுகளில் நிகழ்ந்த விலகல் காரணமாகவே இப்போது இருக்கும் 7 கண்டங்களும் உருவாகின என்ற விஷயம் நாம் அனைவரும் அறிந்ததே. இன்று உலகமெங்கும் இருக்கும் மக்கள் அனைவரும் மத்திய ஆப்பிரிக்கா மற்றும் தெற்கு ஆசியாவிலிருந்தே மற்ற இடங்களுக்கும் சென்றிருப்பதாக வரலாற்று ஆய்வாளர்கள் சான்றுகளுடன் சுட்டிக் காட்டுகின்றனர். இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் பூர்வ குடி மக்களும் இந்தியாவில் இருந்தே சென்றுள்ளார்கள் என்றும், இருவருடைய மரபணுக்களுக்கும் அதிக ஒற்றுமைகள் உள்ளதாகவும் தற்போதைய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆஸ்திரேலியாவில் மனித இனத்தோற்றத்தைப் பற்றி 1600-களில் இருந்தே ஆய்வுகள் நடந்து வருவது குறிப்பிடதக்க ஒன்று. மேலும், 'உயிரியலின் தந்தை' என அழைக்கப்படும் சார்லஸ் டார்வினும், இந்தியாவில் இருந்தே மனித இனம் புலம் பெயர்ந்துள்ளதாக குறிப்பிட்டு உள்ளார்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close