இந்த பேரைக் கேட்டாலே... சும்மா அதிருதுல்ல...!!!

Last Modified : 20 Mar, 2017 06:41 pm
'அரியர்ஸ், கம்மியான மார்க், போதுமான டெக்னிக்கல் நாலெட்ஜ் இல்ல' இந்த மாதிரி காரணங்களால நம்மில் பல பேருக்கு வேலை கிடைக்காம போயிருக்கும். ஆனா இங்க ஒருத்தருக்கு எல்லாம் சரியா இருந்தும் அவரோட பெயரை காரணம் காட்டி வேலை கொடுக்காம அனுப்பி இருக்காங்க. அதுவும் ஒண்ணு இல்ல இரண்டு இல்ல சுமார் 40 கம்பெனியால இவர் இப்படி புறந்தள்ளப்பட்டு உள்ளார். ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை சேர்ந்த 24 வயது இளைஞர் ஒருத்தர் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் தன்னுடைய மரைன் என்ஜினீயரிங் படிப்ப முடிச்சாரு. வகுப்பிலேயே அதிக மதிப்பெண்கள் எடுத்த 2-வது மாணவரான இவர், படிப்பு முடிச்சு 2 வருஷமா பன்னாட்டு ஏற்றுமதி நிறுவனங்கள்ல வேலைக்கு சேர முயற்சி பண்ணிக்கிட்டு இருக்காரு. ஆனா இவரோட பெயர கேட்டதுமே எல்லா நிறுவனங்களுக்கும் தங்களோட கதவு மூடிகிச்சு. இப்படி பன்னாட்டு நிறுவனங்களையே ஆட்டம் காண வச்ச அந்த பெயர் என்ன தெரியுமா? "சதாம் ஹுசைன்". உலக வல்லரசுகளையே நடுங்க வச்ச இந்த பெயரை சதாமின் தாத்தா அவருக்கு ஆசை ஆசையா வச்சாராம். இப்ப அதுவே அவருக்கு வினையாகி இருக்கு. ஏற்றுமதி தொழிலில் இருப்பதால் சதாம் அடிக்கடி வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்ள வேண்டி இருக்கும். அப்ப அவரோட பெயர் காரணமா பல்வேறு பாதுகாப்பு சார்ந்த நடவடிக்கைகளுக்கு அவர் ஆளாக நேரிடும். இதனால கம்பெனிக்கும் பாதிப்பு ஏற்படுமுனு பயந்து எந்த நிறுவனங்களும் இவரை வேலைக்கு சேர்த்துக்கலையாம். இதையடுத்து சதாம் ஹுசைன் என்ற தன்னோட பெயரை சஜித் ஹுசைனு மாத்திக்கிட்டார் அந்த இளைஞர். இனிமேலாச்சும் அவருக்கு ஒரு வேலை கிடைச்சா சரி தான்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close