சுதந்திரமாக சிந்திக்கக் கூடிய விலங்கு கழுதை மட்டும் தான்...!!

  jerome   | Last Modified : 20 Mar, 2017 07:24 pm
'கழுதைக்கு தெரியுமா கற்பூர வாசனை?' 'கழுதை கெட்டால் குட்டிச்சுவரு' என்று நம்ம ஊர்களில் கழுதையை உதாரணமாக வைத்து மற்றவர்களை திட்டுவதை பார்த்திருப்போம். இவ்ளோ ஏன்..? நாமே மற்றவர்களை பேசியிருப்போம். ஆனால், விலங்கியல் ஆர்வலர்கள் கூற்றுப்படி விலங்குகளிலேயே கழுதை தான் மிகவும் சுதந்திரமாக செயல்படவும், சிந்திக்கவும் தெரிந்த விலங்கு. கி.மு 4000 ஆம் ஆண்டில் எகிப்திய நாகரீகத்தில் எவரொருவர் அதிக கழுதைகள் வைத்திருக்கின்றாரோ, அவர் தான் அங்கு மிகப்பெரிய பணக்காரர். அதாவது, இன்று ரோல்ஸ் ராய்ஸ் கார் வைத்திருப்பவர்களைப் போல மதிக்கப்படுவார்களாம். அதேபோல், ஒலிம்பிக் கடவுளான 'ஹெபாஸ்டாஸ்' -ன் வாகனமும் கழுதை தான். அன்று மட்டுமின்றி, இன்றும் லண்டனில் கழுதைகளுக்கான சரணாலயம் அமைத்து அவைகளை பராமரித்து வருகின்றனர். வரும் மே மாதம் 2ஆம் தேதி முதல் 5ஆம் தேதி வரை 'கழுதைகள் வாரம்' கொண்டாடப்பட இருக்கின்றது. கழுதைகளை, குதிரைகள் போல் அவ்வளவு எளிதில் வேலை செய்ய பழக்க முடியாது. ஆனால், அப்படி பழக்கிவிட்டால் அவைகளைப்போல வேலைசெய்ய வேறு எந்த விலங்கினாலும் முடியாதாம். பொதி சுமக்க மட்டுமின்றி காவல் காப்பதற்கும் கழுதைகள் பயன்படுத்தப் படுகின்றன. மிக சாதுவாக இருக்கும் இந்த விலங்கு, அவைகளுக்கு ஆபத்து என்று வந்துவிட்டால் 'விஸ்வரூபம்' எடுத்து விடுமாம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close