உயிரை காப்பாற்றிய 'செஸ்'

Last Modified : 21 Mar, 2017 10:51 am

புகழ் பெற்ற செஸ் விளையாட்டு வீரரான Ossip Bernstein 1918-ஆம் ஆண்டு நடைபெற்ற அக்டோபர் புரட்சியின் போது போல்ஷிவிக் ரகசிய போலீசாரால் கைது செய்யப்பட்டார். வங்கிகளுக்கு சட்ட ஆலோசகராக விளங்கிய இவருக்கு மரண தண்டனை அளிக்க உத்தரவிடப்பட்டது. இதனை அடுத்து துப்பாக்கி முனையில் மரண நொடிகளை எண்ணிக் கொண்டிருந்த Ossip-ன் வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையான சம்பவம் அப்போது தான் நிகழ்ந்தது. கைதிகளின் தகவல் அடங்கிய ஆவணம் ஒன்றை பார்த்துக் கொண்டிருந்த உயர் அதிகாரி ஒருவர், Ossip ஒரு செஸ் விளையாட்டு வீரர் என்பதை தெரிந்து கொண்டார். இதையடுத்து Ossip-ஐ அழைத்த அவர், தன்னுடன் செஸ் விளையாடுமாறு கூறினார். Ossip வென்று விட்டால் அவரை விடுதலை செய்வதாகவும், இல்லையெனில் கொன்று விடுவதாகவும் நிபந்தனை ஒன்றையும் விதித்தார். விறுவிறுப்பாக நடைபெற்ற அந்த ஆட்டத்தில் மரண பயத்துடன் Ossip வெற்றி பெற்றார். இதனை தொடர்ந்து நிபந்தனையின் படி அந்த அதிகாரி Ossip-ஐ விடுதலை செய்ய உத்தரவிட்டார். விடுதலையான Ossip ரஷ்யாவை விட்டு உடனடியாக வெளியேறி பிரான்சில் தஞ்சம் புகுந்தார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.