பேய் ஹோட்டல், எரிமலை நெருப்பு, BBQ சிக்கன் - சாப்பிட போலாமா..??

  jerome   | Last Modified : 21 Mar, 2017 02:00 pm
உயிர்வாழ்வதற்கு மிக முக்கியமானது உணவு தான். இன்னைக்கு நாம ஓடி,ஓடி உழைக்கிறது எல்லாமே அரை சாண் சைஸ் இருக்கிற வயிற்றுக்காகத் தான். பசியைப் போக்குவதற்காக தயாரிக்கப்பட்ட உணவுகள், எப்பொழுது ஆதி மனிதன் நெருப்பைக் கண்டுபிடித்தானோ அக்கணம் முதலே ருசிக்கான ஒன்றாக உருமாறிப்போனது. அந்த கண்டுபிடிப்பின் உச்சகட்டமாக, இப்போது ஸ்பெயின் நாட்டில் எரிமலை நெருப்பில் சமைக்க ஆரம்பித்து விட்டார்கள். ஸ்பெயினின் கனரி தீவுகளில் அமைந்துள்ள டிமான்ஃபாயா தேசிய பூங்காவில், எரிமலைகளின் மேல் 'எல் டியாப்லோ' என்ற ஹோட்டல் கட்டப்பட்டுள்ளது. எல் டியாப்லோ என்ற ஸ்பானிய சொல்லுக்கு தமிழில் பிசாசு என்று அர்த்தம். இந்த ஹோட்டலை எட்வர்டோ மற்றும் ஜீசஸ் ஸோட்டோ என்ற இரு கட்டிட கலைஞர்கள் உருவாக்கி உள்ளனர். எரிமலையின் முகப்புத் துவாரத்தின் மேல் நன்கு வலுவான 9 கருங்கல் பாறைகள் அமைத்து அதன்மேல் BBQ உணவுகள் தயாரிக்கப் படுகின்றன. இந்த எரிமலையில் இருந்து சுமார் 400 டிகிரி செல்சியஸ் வெப்பம் வெளியாகின்றது எனவும், புவியியல் வல்லுநர்கள் மற்றும் அறிவியல் ஆராய்ச்சியாளர்களிடம் தகுந்த ஆலோசனைகளைப் பெற்ற பின்னரே இந்த ஹோட்டல் கட்டப்பட்டதாகவும் அதன் மேலாளர் ஜுலியோ பாட்ரன் தெரிவித்து உள்ளார். மேலும் இந்தப் பகுதியில் அமைந்துள்ள எரிமலைகள் கடைசியாக 1824-ல் வெடித்துள்ளது. மறுபடியும் அவைகள் வெடிக்க தற்போது சாத்தியங்கள் குறைவாக இருப்பதாகவும் கூறியுள்ளார். இந்த பூங்காவிற்கு வரும் சுற்றுலாப் பயணிகள் எரிமலை மேல் அமர்ந்து, அதன் நெருப்பில் சமைத்த உணவுகளை சாப்பிடும் போது, வாழ்வில் மறக்கமுடியாத தருணங்களில் ஒன்றாக இதை உணர்கின்றனராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close