மழைக்காக 'தெறி'க்க விடும் மெக்ஸிகன் பெண்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

நம்ம ஊர்ல தண்ணீர் லாரி வந்தால் பெண்களுக்கிடையே குடுமிப்பிடி சண்டைகள் நடக்கும். ஆனால் மெக்ஸிகோவில், லா எஸ்பரன்சா மற்றும் எல் ரன்சோ என்ற இரண்டு கிராம பெண்கள் மழை வர வேண்டி ஒருவரை ஒருவர் இரத்தம் தெறிக்க, தெறிக்க அடித்துக்கொள்ளும் வினோத சடங்கினை செய்கின்றனர். ஆண்டுதோறும் மே மாதம் நடைபெறும் இந்த சடங்கில், அடித்துக்கொள்ளும் போது வழியும் இரத்தத்தை ஒரு வாளியில் சேமிக்கின்றனர். பின் அதை தங்களின் விவசாய நிலங்களில் தெளிக்கின்றனர். இவ்வாறு தெளித்தால் அவர்களின் மழை தெய்வமான 'லாலொக்' மனமிறங்கி மழை பொழிய வைக்குமென்றும் விவசாயம் செழிக்குமென்றும் நம்புகின்றனர்.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close