உலகிலேயே வாழ குறைவாக செலவாகும் நகரம்

Last Modified : 22 Mar, 2017 08:15 am
உலகிலேயே வாழ அதிகமாக செலவாகும் நகரம் மற்றும் குறைவாக செலவாகும் நகரம் குறித்த ஆய்வு ஒன்றை பொருளாதார புலனாய்வு குழு நடத்தி உள்ளது. உணவு, உடை, போக்குவரத்து, வீட்டு வாடகை, வீட்டு உபயோக பொருட்கள், தனியார் பள்ளிகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அடிப்படையாக கொண்டு இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. அதன்படி கஜகஸ்தானில் அல்மாடி நகரம் உலகிலேயே வாழ செலவு குறைவான நகரமாக தேர்வு செய்யப் பட்டுள்ளது. இதனை தொடர்ந்து இரண்டாவது இடத்தில் நைஜீரியாவின் லாகோஸ் நகரமும், 3-வது இடத்தில் இந்தியாவின் பெங்களூர் நகரமும் உள்ளன. மற்ற இந்திய நகரங்களான சென்னை, மும்பை மற்றும் டெல்லி முறையே 6,7 மற்றும் 10-வது இடத்தை பிடித்துள்ளன. உலகிலேயே வாழ அதிக செலவாகும் நகரங்களின் பட்டியலில் தொடர்ந்து நான்காவது ஆண்டாக சிங்கப்பூர் நகரம் முதல் இடத்தில் உள்ளது. இதனை அடுத்து ஹாங்காங், ஜூரிச் நகரங்கள் முறையே 2-வது மற்றும் 3-வது இடத்தை பெற்றுள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close