'ட்வீட்' செய்து கின்னஸ் சாதனை படைத்த கோழி

  jerome   | Last Modified : 22 Mar, 2017 06:58 pm
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் 'Chicken Treat' என்ற ஃபாஸ்ட் ஃபுட் ஹோட்டல் ஒன்று, தங்களின் ஹோட்டலை விளம்பரப்படுத்த வினோதமான யுத்தியை கையாண்டுள்ளது. அவர்கள் வளர்க்கும் 'Betty' என்ற கோழியை ட்விட்டரில் ட்வீட் செய்ய வைத்துள்ளனர். கோழியும் கீ போர்டில் உள்ள பட்டன்களை தன் அலகினால் கொத்தியும், கால்களால் கீறீயும் தொடர்ந்து 5-க்கும் மேற்பட்ட ஆங்கில எழுத்துக்களை டைப் செய்துள்ளது. இதன் மூலம் 'Betty' கின்னஸ் புக்கில் இடம்பெற்று விட்டது. Betty-ன் ட்வீட்டுகள் #chickentweet என்ற ஹேஷ்டேக்கில் பிரபலமாகி விட்டது. Betty டைப் செய்த சில வார்த்தைகள் ஸ்லோவேக்கியன் மொழியில் இருந்ததாக கூகுள் ட்ரான்ஸ்லேடர் காட்டியுள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close