இன்று 'உலக காசநோய் தினம்'

  mayuran   | Last Modified : 24 Mar, 2017 05:42 pm
ஆண்டுதோறும் மார்ச் 24 ஆம் தேதி அதாவது இன்று 'உலக காசநோய் தினம்' கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. உலக அளவில் இந்தியாவில் மட்டும் காசநோயால் 24% பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்டிற்கு 28 லட்சம் பேர் பாதிக்கப் படுவதாகவும், அதில் 4.5 லட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அந்நிறுவனம் கூறியுள்ளது. எச்.ஐ.வி, மலேரியா, டெங்குவை காட்டிலும் காச நோயால் உயிரிழப்பவர்கள் அதிகம். இந்த நோய் குறித்து விழிப்புணர்வு இல்லாமல், இதற்கு சிகிச்சை மேற்கொள்ளாத நோயாளிகள், ஆண்டுக்கு 10 முதல் 15 நபர்களுக்குக் காசநோயை பரப்புகின்றனர். காசநோய் அறிகுறிகள் என்ன? ஆரம்பகட்டமாக, தொடர்ந்து இருமலுடன் மாலை நேர காய்ச்சல், உடல் எடை குறைந்து கொண்டே செல்லுதல், இருமலுடன் சளி வரும்போது ரத்தமும் சேர்ந்து வருதல், பசியின்மை போன்றவை இருக்கும். இதற்கு சிகிச்சை உண்டா? இந்த நோய்க்கான அறிகுறிகள் அறியப்பட்டவுடன், உடனடியாக மருத்துவரை நாடி, தொடர்ந்து 6 மாதங்கள் சரியான சிகிச்சை எடுக்கும் பட்சத்தில் நோயை முற்றிலுமாக குணப்படுத்தலாம். எவ்வாறு நோய் தொற்று ஏற்படுகிறது? ஏற்கனவே இந்த நோய் தொற்று உள்ளவரிடம் இருந்து காசநோய் கிருமி தொற்றுகிறது. சர்க்கரை நோய், புகையிலை மற்றும் புகைப்பழக்கம் உள்ளவர்களும் காசநோயாளிகளாக மாறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close