ஆண்களின் நெஞ்சு முடியில் உருவான மேலாடை

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அதிக குளிரில் இருந்து தப்பிக்க ஆடு மற்றும் மாட்டின் தோலினால் நெய்யப்பட்ட மேலாடைகளை இன்றளவும் பயன்படுத்தி வருகின்றோம். இதன் உச்சகட்டமாய் மனிதர்களின் உரோமங்களில் இருந்து மேலாடைகளை உருவாக்கியுள்ளார் இங்கிலாந்தைச் சேர்ந்த ஆடை வடிவமைப்பாளர் ஒருவர். இந்த மேலாடையை ஆர்லா என்ற பால் தயாரிப்பு நிறுவனம் தன்னுடைய நிறுவனத்தின் விளம்பரத்திற்காக பயன்படுத்தி வருகின்றது. இதுகுறித்து ஆர்லாவின் செய்தி தொடர்பாளர், "கடந்த சில ஆண்டுகளாக இங்கிலாந்து ஆண்களின் உடலமைப்பு மற்றும் தோற்றம் முழு ஆண்மை பெற்றதாக தெரியவில்லை. இந்நிலையில் நாங்கள் புதிதாக அறிமுகப்படுத்தி உள்ள சாக்லேட் பால் விளம்பரத்திற்கு இந்த விஷயத்தை முன்வைக்கையில் தான், ஆண்களின் முடிகளில் செய்த மேலாடையை பற்றி தெரிய வந்தது. ஆகவே, அதையும் சேர்த்து விளம்பரத்திற்கு பயன்படுத்திக் கொண்டோம்" என்று கூறியுள்ளார். இந்த வகை மேலாடையின் விலை ரூ. 18,000 என இந்த ஆடையை வடிவமைத்தவர் கூறியுள்ளார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close