ஒரு பென்சிலை சீவி கொடுக்க ரூ.1000 கட்டணம்...???

  jerome   | Last Modified : 24 Mar, 2017 06:36 pm

அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் ரீஸ் என்ற பிரபல கார்ட்டூனிஸ்ட் பென்சிலை சீவி கொடுக்கும் வினோதமான வியாபாரத்தை தொடங்கியுள்ளார். டேவிட், கார்ட்டூன் வரைவது மட்டுமல்லாமல் அரசியலை விமர்சித்து நகைச்சவை துணுக்குகளையும் எழுதக் கூடியவர். இந்த காரணத்தினால் அவர் கடந்த 2009 ஆம் ஆண்டு தன் வேலையை இழக்க நேரிட்டது. அதற்கு அடுத்த ஆண்டிலேயே பென்சில் சீவி கொடுக்கும் வியாபாரத்தை தொடங்கிவிட்டார். பென்சில் கூர்மையாக்குவதை ஒரு கலையாக செய்து வரும் டேவிட் இதற்காக தனித்தனியான உபகரணங்களை வைத்துள்ளார். பென்சிலை கூர்மையாக்குவது பற்றி "How to Sharpen Pencils" என்ற புத்தகத்தையும் எழுதியுள்ளார். இதுபோக Artisanal Pencil Sharpening என்ற வெப்சைட் மூலம் ஆன்லைனிலும் பென்சில் கூராக்கும் பிஸினஸை செய்து வருகின்றார். ஒரு பென்சிலை கூர்மையாக்கி கொடுக்க ரூ.1000 வரை கட்டணம் வாங்கும் இவருக்கு, கஸ்டமர்கள் அதிகம். அதே நேரத்தில் இது ஒரு ஏமாற்று வேலை என பல விமர்சனங்களுக்கும் ஆளாகி வருகின்றார்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.