லிப்ஸ்டிக் கண்டுபிடித்ததும் இந்தியர்கள் தான்..!!!

  jerome   | Last Modified : 25 Mar, 2017 03:33 pm

சுமார் 3500 ஆண்டுகளுக்கு முன்பு சிந்து சமவெளி பகுதியில் வாழ்ந்த மக்கள் திருமண வைபவங்களின் போது மணப்பெண்களை அலங்கரிக்க சில ஒப்பனை பொருட்களை பயன்படுத்தி இருக்கிறார்கள். அவற்றில் ஒன்றுதான் இந்த லிப்ஸ்டிக். இதற்காக அவர்கள் பயன்படுத்திய மூலப்பொருட்கள் இரண்டே இரண்டுதான். ஒன்று தேன் மெழுகு மற்றொன்று தாவர நிறமிகள். இந்த இரண்டையும் கலந்து திரவ (Liquid) வடிவில் கிடைத்த கூழ்மத்தை தங்களது உதடுகளில் வர்ணமாக பூசிக்கொண்டனர். இதுதான் இன்றைய நவீன லிப்ஸ்டிக் தயாரிப்பதற்கான முன்னோடி. சில நூற்றாண்டுகளுக்கு பிறகு வணிகர்களின் வாயிலாக உதட்டு சாயம் பற்றிய செய்திகள் மெசபடோமிய பிரதேசத்தை எட்டியது. ஆரம்பத்தில் மெசபடோமிய மக்கள் (கி.மு.1500) விலையுயர்ந்த நகைகளைத்தான் பொடியாக்கி உதட்டில் சாயமாக பூசியிருக்கிறார்கள். நாளடைவில் சிலர் வண்ணத்து பூச்சிகளின் உடலிலுள்ள நிறத்தையும் இன்னும் சிலர் மயிலின் இறகிலுள்ள நிறத்தையும் கொண்டு தங்களது உதட்டை அலங்கரித்துக் கொண்டார்கள் என்று சில வரலாற்று சான்றுகள் தெரிவிக்கின்றன. 16-ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத் தான் லிப்ஸ்டிக்கை பயன்படுத்திய முதல் பிரபலம் ஆவார். அன்றிலிருந்து தான் லிப்ஸ்டிக் பிரபலமடைய துவங்கியது. இருப்பினும் பொதுமக்கள் லிப்ஸ்டிக்கை பயன்படுத்த தயக்கம் காட்டியே வந்துள்ளனர். 18-ஆம் நூற்றாண்டு வரை பெரும்பாலும் பாலியல் தொழில் செய்பவர்களும், நடிகர்கள்/ நடிகைகள் மட்டுமே பயன்படுத்தி வந்துள்ளனர். 1923-ல் திருகினால், லிப்ஸ்டிக் இருக்கும் தகடு மேலே வரும் வகையிலான உலோக உருளையை ஜேம்ஸ் புரூஸ் பேசன் என்பவர் கண்டறிந்தார். இரண்டாம் உலகப் போர் நடைபெற்ற காலத்தில் தான் லிப்ஸ்டிக் பிளாஸ்டிக் உருளைகளில் அடைக்கப்பட்டு விற்பனைக்கு வந்தது. 1930-ஆம் ஆண்டு எலிசபெத் ஆர்டன் என்ற அழகுக்கலை நிபுணர் லிப்ஸ்டிக்குக்கு பல்வேறு நிறங்களை தரும் பல்வேறு வகையான நிறமிகளை கண்டறிந்து அறிமுகப்படுத்தினார், அதன் பின்னர்தான் பல்வேறு வகையான கலர்களில் லிப்ஸ்டிக் தயாரிக்கப்பட்டு கடைகளில் விற்பனைக்கு வர ஆரம்பித்தது. ஆகவே நண்பர்களே லிப்ஸ்டிக் என்பது மேற்கத்திய கலாச்சாரம் அல்ல, அதுவும் நமது கலாச்சாரம் தான்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.