5066 ஆண்டுகள் வயதை உடைய பழைமையான மரம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

மனிதன் தோன்றுவதற்கு முன்னிருந்தே மரங்கள் தோன்றி வளர்ந்து கொண்டிருந்தன என்பதே வரலாறு. நாளடைவில் உருவான கலாச்சாரங்கள், நாகரீக வளர்ச்சிகளில் மனிதனுக்கு தேவையான பல அத்தியாவசிய பொருட்களை தருவிப்பதற்கு மரங்களே முதன்மை காரணியாகவும் விளங்கின. இன்றளவும், மரங்களால் பற்பல அளப்பரிய நன்மைகள் கிடைத்துக்கொண்டு தான் இருக்கின்றன. இதை அடிப்படையாக வைத்து உலகில் உள்ள தொன்மையான மரங்களை தன் புகைப்படங்கள் வாயிலாக வெளிக்கொணர்ந்துள்ளார் சான் ஃபிரான்சிஸ்கோவைச் சேர்ந்த பெத் மூன் என்ற பெண் புகைப்படக் கலைஞர். சுமார் 14 வருடங்கள் உலகெங்கும் பயணித்த பெத் மூன், பல நூற்றாண்டுகளாக இம்மண்ணில் வேரூன்றி நிலை கொண்டிருக்கும் அரிய மர வகைகளை புகைப்படம் எடுத்ததன் விளைவாக, உலகின் மிகப் பழைமையான மரத்தின் வயது 5066 என்று தெரிய வந்துள்ளது. கலிஃபோர்னியாவின் வெள்ளை மலைக்குன்றுகள் பகுதியில் உள்ள பிரிஸ்டில்கோன் எனும் வகையைச் சேர்ந்த இந்த மரத்தின் வயது 2013- ஆம் ஆண்டு வரை 4845 என்றே தான் கணக்கிடப் பட்டிருந்தது. ஆனால், அதன்பின் நடத்தப்பட்ட 'Growth Rings' கணக்கீடு மூலம் அதன் வயது 5066 என்று தீர்மானிக்கப் பட்டுள்ளது. இம்மரத்திற்கு அடுத்தவாறு சுமார் 4000 ஆண்டுகள் பழைமை உடைய ஜோரோஸ்டிரியன் சர்வ் என்ற ஈரானிய நாட்டைச் சேர்ந்த மரம் இரண்டாவது இடத்தில் உள்ளது. மரங்களின் வயதை கணக்கிடும் Growth Rings முறை என்பது, மரத்தின் தண்டு பகுதியினை குறுக்குவாக்கில் வெட்டி அதனுள் இருக்கும் வளையங்களின் எண்ணிக்கையை கொண்டு கணக்கிடப் படுவதாகும். இந்த முறையின் மூலம் முன்காலங்களில் நிலவிய பருவ நிலை மாற்றம், சீதோஷ்ண நிலை, மண்ணின் அமிலகாரத்தன்மை ஆகியவற்றையும் தெரிந்துகொள்ள முடியுமாம்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.