'கட்டிப்பிடி வைத்தியம்' செய்யும் கல்வி நிறுவனம்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
அமெரிக்காவைச் சேர்ந்த ரீட் மற்றும் மர்சியா என்ற ஜோடி கடந்த 2004 ஆம் ஆண்டிலிருந்து 'Cuddle Party' என்ற அமைப்பினை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் பாலியல் கல்வி தொடர்பான கருத்தரங்கு மற்றும் விழிப்புணர்வை நடத்தி வருபவர்கள். இவர்கள் உருவாக்கியுள்ள Cuddle Party - ல் வயது வித்தியாசமின்றி ஆண்,பெண் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். இந்த பார்ட்டியில் கலந்து கொள்பவர்கள் யாரை வேண்டுமானாலும் அரவணைத்துக் கொள்ளலாம். அரவணைப்பின் போது அழுகை வந்தாலோ, சிரிப்பு வந்தாலோ அதை வெளிப்படுத்துவதில் தயங்கக் கூடாதாம். இந்த பார்ட்டிக்கென்று சில விதிமுறைகளும் உள்ளன. பார்ட்டி ஆரம்பிக்கும் 30 நிமிடங்களுக்கு முன் மனித உடற்கூறு பற்றியும், உளவியல் பற்றியும் வகுப்புகள் எடுக்கப்படும். பைஜாமா வகை உடைகளை மட்டுமே அணிந்திருக்க வேண்டும். யாரையேனும் அரவணைக்க விரும்பினால் அவர்களின் அனுமதி இருக்க வேண்டும். இதன் பின்னரே, பார்ட்டி தொடங்கப்படும். இந்த பார்ட்டி அமெரிக்காவில் மட்டுமின்றி ஐரோப்பா, ஆஸ்திரேலியாவிலும் நடந்து வருகின்றது. இதுபற்றி மேலும் தெரிந்து கொள்ள http://www.cuddleparty.com என்ற இணைய தளத்தை கிளிக் செய்யவும்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close