எலி, முயல், நரி, மான் குட்டிகளுக்கு தாயான நாய்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
லண்டனில் உள்ள நுனட்டன் மற்றும் வார்விக்சயர் வனவிலங்கு சரணாலயத்தில் உள்ள 'ஜாஸ்மின்' என்ற 7 வயது நாய் தான் கிட்டத்தட்ட 50 உயிர்களுக்கு தாயாக இருந்துள்ளது. காடுகளில் அனாதையாக்கப்பட்ட 5 நரி குட்டிகள், 8 கினி எலிகள், 2 நாய் குட்டிகள், 15 முயல்கள், 15 கோழிக்குஞ்சுகள், 4 பேட்ஜர் குட்டிகள், 1 மான் குட்டி என 50 ஜீவன்களுக்கு ஆதரவாக இருந்து அவைகளை பராமரித்து வந்துள்ளது. ஜாஸ்மின் இவ்வாறு செயல்படுவது அந்த சரணாலய ஊழியர்களுக்கு ஆரம்பத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தாலும், நாளடைவில் ஜாஸ்மினின் பாசத்தால் பழகிவிட்டதாம். இதில் என்ன ஒரு ஆச்சர்யம் என்றால், 7 வருடங்களுக்கு முன் ஜாஸ்மினும் இந்த சரணாலயத்திற்கு அனாதையாக தான் வந்ததாம். ஜாஸ்மின் 'கிரே ஹவுண்ட்' எனும் வேட்டை நாய் இனத்தை சேர்ந்தது என்பது குறிப்பிட வேண்டிய ஒன்று.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close