ஸ்னூக்கர் பிறந்தது இந்தியாவில் தான்...!!!

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
16 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷாரால் விளையாடப்பட்டு வந்த 'பில்லியர்ட்ஸ்' என்ற விளையாட்டுகளில் சில மாற்றங்களை கொண்டு வந்ததன் மூலம் உருவானதே 'ஸ்னூக்கர்'. இந்த இரண்டிற்கும் மிகச்சில வித்தியாசங்களே உள்ளன. பில்லியர்ட்ஸில் வெள்ளை, சிகப்பு, மஞ்சள் நிற பந்துகள் இருக்கும். இதில் வெற்றிப்புள்ளிகள் முன்னரே தீர்மானிக்கப்பட்டு விடும். யார் அதை முதலில் அடைகிறார்களோ அவர்கள் வெற்றி பெற்றவர்களாக அறிவிக்கப்படுவர். ஸ்னூக்கரில் 15 சிகப்பு நிற பந்துகளும், 6 பிற வண்ணப் பந்துகளும் இருக்கும். இதில் வெற்றிப்புள்ளிகள் முன்னரே தீர்மானிக்கப் படுவது இல்லை. 19 ஆம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆயுதப் படையினர் இந்தியாவில் தங்கியிருந்த போது ஸ்னூக்கர் விளையாட்டு பிரபலமானது. இந்த ஸ்னூக்கரை மத்திய பிரதேச மாநில ஜபல்பூரில் இருந்த ஆங்கிலேய அதிகாரி சர். பிரான்சிஸ் பிட்ஸ்ஜெரால்ட் என்பவரே அறிமுகப் படுத்தினார். அதன்பின் 1885-ல் இந்தியாவிற்கு வருகை தந்த பிரிட்டிஷ் பில்லியர்ட்ஸ் சாம்பியன் ஜான் ராபர்ட்ஸ், ஸ்னூக்கரை இங்கிலாந்தில் அறிமுகப் படுத்தினார். 'ஜென்டில் மேன் கேம்' எனப்படும் இந்த ஸ்னூக்கர் மற்றும் பில்லியர்ட்ஸ் விளையாட்டுகள் 1969-ல் பிபிசி நடத்திய உலக சாம்பியன் போட்டிக்குப் பிறகே பிரபலமாகத் தொடங்கியது. இன்று வரை உலக சாம்பியனுக்கான போட்டிகள் நடந்து வருகின்றன. இதில் உலக சாம்பியன் பட்டத்தை வெல்பவர்களுக்கு சுமார் 3 கோடி ரூபாய் வரை பரிசுத்தொகையாக வழங்கப்படுகின்றது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close