மரணத்தைக் கொண்டாடும் ராஜஸ்தான் பழங்குடியினர்

  jerome   | Last Modified : 30 Mar, 2017 04:47 pm
இந்தியாவில் 50 க்கும் மேற்பட்ட பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர்கள் வாழ்ந்து வருகின்றனர். மத்திய பிரதேச மாநிலத்தில் தான் பழங்குடி இனத்தவர்கள் அதிகம். இந்தியாவில் உள்ள பெரும்பாலான பழங்குடியினரின் வாழ்க்கை முறை மற்றும் கலாச்சாரம், ஆஸ்திரேலிய மற்றும் மங்கோலிய பழங்குடியினரோடு ஒத்துப்போகின்றதாம். ராஜஸ்தான் மாநிலத்திலும் பழங்குடியினர் அதிகம். இதில் 'சாத்யா' என்ற பிரிவைச் சேர்ந்த பழங்குடியினர் நாடோடி வாழ்க்கையையே நடத்தி வருகின்றனர். இந்த பிரிவைச் சேர்ந்தவர்கள் தங்களுள் யாரேனும் இறந்து விட்டால், அந்த துக்க சம்பவத்தை வெகு விமரிசையாக கொண்டாடி மகிழ்கின்றனர். இதுகுறித்து அவர்களில் ஒருவர், "இந்த உடல் இறைவன் நமக்கு கொடுத்த சாபம். எப்போது நம் ஆன்மா உடலை விட்டு பிரிகின்றதோ அதுதான் உண்மையான வரம். ஆகவே தான், நாங்கள் மரணத்தை கொண்டாடுகின்றோம். எங்களுள் யாரேனும் இறந்துவிட்டால், அன்று புது ஆடை அணிந்து, இனிப்புகள் பரிமாறிக்கொள்வோம். இறந்தவரின் சடலத்தை அலங்கரித்து எடுத்து சென்று எரிப்போம்" என்று கூறியுள்ளார். இவர்களின் இனத்தில் பெண் குழந்தை பிறந்தால் தான் மகிழ்ச்சி அடைகின்றனர். ஏனென்றால், பெண் குழந்தையை விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்துவதன் மூலம் குடும்பத்திற்கு தேவையான வருமானத்தை பெற்றுக் கொள்கின்றனர். இவர்களின் இந்த நிலையை மேம்படுத்த ராஜஸ்தான் அரசு தனிக்கவனம் செலுத்தி வருகின்றது. இந்திரா அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் இவர்களுக்கு வீடுகள் கட்டி கொடுத்தது. ஆனால், இவர்கள் அந்த வீடுகளை விற்றுவிட்டு நாடோடிகளாகவே வாழ்கின்றனராம்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close