பெண்களுக்கு பிடித்த ஆடையாக மாறும் 'பெல்ட் சேலைகள்'

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

ஃபேஷன் டெக்னலாஜியில் நாளுக்கு நாள், புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. அதில் ஒன்றாய் இப்போது 'பெல்ட் சேலைகள்' ட்ரெண்டாகி வருகின்றது. இதற்கு முன் ஆண்களுக்காக பெல்ட் வைத்தும், 'ஒட்டிக்கோ..கட்டிக்கோ' டைப்பிலும் வேட்டிகள் வந்தது. அதே போல் இப்போது பெண்களுக்கு சேலைகளில் வந்துள்ளது. பல சினிமா பிரபலங்களும், மாடல்களும் இந்த சேலைகளை விரும்பி அணிந்து நிகழ்ச்சிகளில் வலம் வந்து கொண்டிருக்கின்றனர். இந்த சேலை குறித்து பிரபல ஆடை வடிவமைப்பாளர் ரினா திகா கூறுகையில், "என் வீட்டில் அழகான லட்சுமி, சரஸ்வதி படங்கள் வைத்துள்ளேன். பெண் தெய்வங்களாகிய அவர்கள் கூட இடையில் பெல்ட் போன்ற அணிகலனை அணிந்துள்ளனர்" என்று கூறியுள்ளார். இந்த பெல்ட் சேலைகளின் விலை அவற்றின் டிசைன்களுக்கு ஏற்ப விற்கப்படுகின்றது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close